»   »  சிம்பு, அனிருத் மீது நெல்லையிலும் ஒரு வழக்கு!

சிம்பு, அனிருத் மீது நெல்லையிலும் ஒரு வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதேபோல, கோவை இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் வக்கீல் ரிஸ்வானா திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

One more case on Simbu and Anirudh

அந்த மனுவில், நடிகர் சிம்பு பாடியுள்ள பீப் பாடலில் பெண்களை அவதூறு செய்யும் வார்த்தைகள் உள்ளதால் அவர் மீதும், இசையமைப்பாளர் அனிருத் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனு, நீதித் துறை நடுவர் ராமலிங்கம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதித் துறை நடுவர், சிம்பு, அனிருத் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

English summary
One more case was registered on Beep song makers Simbu and Anirudh in Nellai court.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil