»   »  பீப் பாய்ஸ் மீது மேலும் ஒரு வழக்கு!

பீப் பாய்ஸ் மீது மேலும் ஒரு வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனிருத்தை இசையமைப்பாளர் என்றோ, சிம்புவை நடிகர் என்றோ இனி குறிப்பிட வேண்டிய அவசியத்தை அவர்களே வைக்கவில்லை. பீப் பாய்ஸ் என்றால் உலகத்துக்கே தெரியும்!

இந்த பீப் பாய்ஸ் விவகாரம் கொஞ்சம் அடங்கியமாதிரி தெரிந்த நிலையில், இப்போது மீண்டும் ஒரு வழக்கு இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியில்.

சிம்புவும் அனிருத்தும் பீப் பாடல் என்ற பெயரில் ஒரு கண்றாவிப் பாடலை வெளியிட்டதும் ஏக கண்டனங்கள், ஏகப்பட்ட வழக்குகள்.

சாதிச் சாயம்

சாதிச் சாயம்

பலரும் ஓயாமல் இந்த வழக்குகள் பற்றியே பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென இந்த வழக்குகளுக்கு சாதிச் சாயம் பூச ஆரம்பித்தனர். விளைவு, சிம்பு மீது பாமக சார்பில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.

தூத்துக்குடியில்

தூத்துக்குடியில்

இந்தநிலையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது ஆபாச பாடல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் சக்திகனி, தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

வழக்கு

வழக்கு

அதில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலும் வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடிய நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

உத்தரவு

உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி காமராஜ், சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மார்ச் மாதம் 7-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மத்திய பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இதையடுத்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது 509 (பெண்களை இழிவுபடுத்துதல்), 67 (இன்டர்நெட்டில் வெளியிட்டு குற்றம் சுமத்துதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

English summary
An advocate has registered a case against Simbu and Anirudh for their abusive Beep Song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil