twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதோ இன்னும் ஒரு நடிகை தற்கொலை... தொடர்ந்து உதிரும் நட்சத்திரங்கள்!

    By Sudha
    |

    சென்னை: தற்கொலை செய்து கொண்ட நடிகைகளின் பட்டி்யலில் சேர்ந்துள்ளார் இளம் நடிகை ஜியா கான். இவர் இந்தியில் உருவான கஜினிரீமேக்கிலும், அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

    இந்தியா என்றில்லை, உலகம் முழுவதுமே நடிகைகளின் தற்கொலை என்பது சாதாரணமாக விஷயமாகி விட்டது. அடிக்கடியும், அவ்வப்போதும் ஏதாவது ஒரு நடிகை தற்கொலை செய்துகொண்டபடிதான் உள்ளார்.

    மன அழுத்தங்கள், குடும்ப நெருக்கடிகள், காதல் தோல்விகள், மோசடிகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் என இதற்கு எத்தனையோ காரணங்கள்... அந்த வரிசையில் தற்போது ஜியா கானும் தனது உயிரை மாய்த்துள்ளார்.

    இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட நடிகைகள் குறித்த ஒரு பார்வை...

    அழகி ஷோபா...

    அழகி ஷோபா...

    கருப்பாக இருந்தாலும் அத்தனை பேரின் மனங்களிலும் அப்படியே ஈசிக் கொண்டவர் இந்த ஷோபா. பசி ஷோபா என்றும் ஊர்வசி பட்டம்வென்றதால் ஊர்வசி ஷோபா என்றும் அழைக்கப்பட்டவர் ஷோபா.

    நடிப்புக்கரசி

    நடிப்புக்கரசி

    ஷோபாவின் நடிப்பு அவ்வளவு அற்புதமாக இருக்கும். அவரது கண் கூட நடிக்கும். இதழ்கள் நடிப்பின் துடிப்பை நச்சென்று வெளிப்படுத்தும். ஒவ்வொரு பிரேமிலும் அவரை ரசித்து பார்த்து சந்தோஷப்பட்டது அன்றைய ரசிகர் கூட்டம். நடிகர்களுக்கு இணையான கம்பீர நடிப்பு ஷோபாவுடையது.

    17 வயதில் சிறந்த நடிகை

    17 வயதில் சிறந்த நடிகை

    தனது 17வது வயதில் பசி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில்சிறந்த நடிகை விருதினை வாங்கியவர் ஷோபா. இந்த சாதனையை இதுவரை வேறு யாரும் படைத்ததில்லை.

    மாண்டு போன மகாலட்சுமி

    மாண்டு போன மகாலட்சுமி

    மகாலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட ஷோபா, பாலுமகேந்திராவின் பட்டறையைச் சேர்ந்தவர். பாலுவின் மனதிலும் புகுந்தவர். ஆனால் என்ன கொடுமை பாருங்கள்.. தனது 17வது வயதிலேயே தற்கொலை மூலம் மாண்டும் போனார் ஷோபா.

    வட்லபட்டி விஜயலட்சுமி என்கிற சில்க்

    வட்லபட்டி விஜயலட்சுமி என்கிற சில்க்

    விஜயலட்சுமி வட்லபட்டி என்ற இயற் பெயர் கொண்டவர் சில்க் ஸ்மிதா. தென்னிந்தியத் திரையுலகையே தனது கவர்ச்சியின் கீழ் வைத்திருந்தவர். சிலுக்கு என்ற செல்லப் பெயரால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவர்.

    பாதியில் முடிந்து போன வாழ்க்கைச் சக்கரம்

    பாதியில் முடிந்து போன வாழ்க்கைச் சக்கரம்

    வண்டிச்சக்கரம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை 1996ம் ஆண்டு முடிவுக்கு வந்தது - தற்கொலை மூலம்.

    மறக்க முடியுமா ஜெயலட்சுமியை?

    மறக்க முடியுமா ஜெயலட்சுமியை?

    மறக்க முடியுமா படாபட் ஜெயலட்சுமியை... மூன்று முடிச்சு படத்தில் வந்த என்னடி உலகம் அதில் எத்தனை கலகம் என்ற பாட்டில் அவர் நடிப்புதான் எவ்வளவு அழகு.. அந்தப் படத்தில் அவர் உபயோகித்த படாபட் என்ற வார்த்தையே அவருக்கு அடையாளமாகிப் போனது. அழகான, அருமையான நடிகையாக வலம் வந்த படாபட்டின் முடிவு தற்கொலையாகிப் போனதுதான் துயரமானது.

    வாழ்க்கையில் வீழ்ந்து போன விஜி

    வாழ்க்கையில் வீழ்ந்து போன விஜி

    விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் நடித்து பிரபலமானவர் பெங்களூர் விஜி. தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்த அவரது வாழ்க்கையும் 2000மாவது ஆண்டு தற்கொலை மூலம் முடிவுக்கு வந்தபோது அனைவரும் வருந்தினர்.தற்கொலைக்கு முன்பு அவரது வாழ்க்கையில் பல புயல்கள். அத்தனையும் ஓய்ந்தபோது விஜியின் விதி முடிவுக்கு வந்திருந்தது.

    கன்னடத்து சரோஜாதேவியின் துயர முடிவு

    கன்னடத்து சரோஜாதேவியின் துயர முடிவு

    கன்னடத்து சரோஜாதேவி என்ற செல்லப் பெயருடன் கன்னடத் திரையுலகில் பிரபலமாக திகழ்ந்தவர் கல்பனா. சிறந்த நடிகையான அவர் பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர். கன்னடத் திரையுலகம் கண்ட மிகச் சிறந்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆனால் இவரது முடிவும் தற்கொலையில் வந்ததே துயரமான ஒன்றுதான். 1979ம் ஆண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் கல்பனா.

    மர்ம மரணத்தில் முடிந்த திவ்ய பாரதியின் வாழ்க்கை

    மர்ம மரணத்தில் முடிந்த திவ்ய பாரதியின் வாழ்க்கை

    தெலுங்கிலும், தமிழிலும் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த அழகு நடிகை திவ்ய பாரதி. 1993ம் ஆண்டு இவர் 5 மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து இறந்தார். இது தற்கொலையா அல்லது கொலையா அல்லது விபத்தா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இவரது வாழ்க்கையில் மொத்தமே 14 படங்களில் தான் நடித்தார். இறந்தபோது வயது 19தான். மறக்க முடியாத அழகு நடிகை இவர்.

    மயூரி என்கிற ஷாலினி

    மயூரி என்கிற ஷாலினி

    அதிகப் படங்களில் நடித்திருக்காவிட்டாலும் அழகு நடிகையாக அறியப்பட்டவர் மயூரி என்கிற ஷாலினி. ஸ்திரி படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிய இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். 2005ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி இவரது வாழ்க்கை தற்கொலை மூலம் முடிவுக்கு வந்தது. அப்போது வயது 22தான்.

    கோணலாகிப் போன மோணலின் வாழ்க்கை

    கோணலாகிப் போன மோணலின் வாழ்க்கை

    சிம்ரனின் தங்கையான மோணலின் வாழ்க்கையும் தற்கொலையில்தான் முடிந்தது. 2002ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் மோணல். காதல் தோல்வியே இதற்குக் காரணம். பத்ரி படத்தில் விஜய் ஜோடியாக
    நடித்தவர்.

    பிரத்யுஷா

    பிரத்யுஷா

    மோணல் இறந்த சில நாட்களிலேயே இன்னொரு நடிகையின் மரணச் செய்தி வந்து ரசிகர்களை அதிர வைத்தது. அவர் தெலுங்கைச் சேர்ந்த பிரதியுஷா. ஹைதராபாத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே காரில் தற்கொலை செய்து பிணமாகிக் கிடந்தார் பிரதியுஷா. அவரது காதலரான சித்தார்த்த ரெட்டியும் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்து விட்டார். பிரதியுஷாதான் மரணத்திப் போனார். பிரேதப் பரிசோதனையில் பிரதியுஷா கற்பழிக்குப்பட்டு கொல்லப்பட்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகின.

    மர்லின் மன்றோவும் இப்படித்தான்

    மர்லின் மன்றோவும் இப்படித்தான்

    நம்ம ஊரில்தான் என்றில்லை.. உலகப் புகழ் பெற்ற நடிகைகள் சிலரும் கூட இப்படித்தான் தற்கொலையில் வாழ்க்கையை முடித்துள்ளனர்.உலகப் புகழ் பெற்ற மர்லின் மன்றோவும் தற்கொலை மூலம்தான் தனது கதையை முடித்தார். செக்ஸ் சிம்பலாக வலம் வந்த மர்லினின் மரணம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

    ஏன் இந்த தற்கொலைகள்?

    ஏன் இந்த தற்கொலைகள்?

    நடிகைகள் தற்கொலை என்பது தொடர் கதையாகவே உள்ளது. மன உளைச்சல்தான் இதில் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. நடிகைகளுக்கே உரித்தான பல்வேறு வகையான நெருக்கடிகளும் இதற்குக் காரணமாக கூறப்படுகின்றன. எத்தனையோ அருமையான நடிகைகளை இந்தத்திரையுலகம் தொடர்ந்து இழந்தபடியே இருக்கிறது. இதைத் தடுக்க முடியாமல் அத்தனை திரையுலகமும் அமைதியாகவே இருக்கின்றன....

    English summary
    One more film star ends her life through suicide. Here is a list of actressess who have ended their life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X