»   »  ‘கபாலி’க்காக விருது வாங்கிய நடிகையைத் தேடும் ரஞ்சித்

‘கபாலி’க்காக விருது வாங்கிய நடிகையைத் தேடும் ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ரஜினியை வைத்து கபாலி என்ற புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான போட்டோஷூட் சமீபத்தில் முடிவடைந்தது.

கதைப்படி, கபாலி என்ற தாதா கேரக்டரில் ரஜினி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக வெள்ளை நிற தாடியுடன் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற போட்டோஷூட் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆனது.


ராதிகா ஆப்தே...

ராதிகா ஆப்தே...

இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியுள்ளார். மகளாக தன்ஷிகா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


இன்னொரு நாயகி...

இன்னொரு நாயகி...

ஆனால், ராதிகா ஆப்தே தவிர கபாலியில் ரஜினிக்கு மற்றொரு நாயகியும் இருக்கிறாராம். தாதா கேரக்டரான வயதான ரஜினிக்கு ஜோடியாக வேறொரு நாயகியை நடிக்க வைக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம்.


விருது பெற்ற நாயகி...

விருது பெற்ற நாயகி...

இதற்காக விருது பெற்ற திறமையான நடிகையை அவர் தேடி வருகிறாராம். காரணம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் அழுத்தமான பெர்பாமென்ஸ் கொடுக்க வேண்டும் என ரஞ்சித் எதிர்பார்க்கிறாராம்.


பேச்சுவார்த்தை...

பேச்சுவார்த்தை...

இதற்காக இந்தியாவிலுள்ள விருது பெற்ற சில நடிகைகளிடம் ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


English summary
The sources says that the director Ranjith is searching for a good performing actress for Kabali.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil