»   »  மெர்சல் படத்தில் இன்னொரு சர்ப்ரைஸா?

மெர்சல் படத்தில் இன்னொரு சர்ப்ரைஸா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 'மெர்சல்' படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் ஏற்கெனவே சூப்பர்ஹிட் ஆகியுள்ளன.

இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய கவிஞர் விவேக் தற்போது ட்விட்டரில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அவரது லேட்டஸ்ட் ட்வீட்டைப் பார்க்கும்போது 'மெர்சல்' படத்திலிருந்து இன்னொரு பாடல் இன்று வெளிவர வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

இன்னும் ஒண்ணு இருக்கு :

'இன்னும் ஒன்று மீதமுள்ளது' என பாடலாசிரியர் விவேக் ட்வீட் செய்திருக்கிறார். அவர் ட்வீட்டியதை பார்த்தால் 'மெர்சல்' படத்தின் இன்னொரு பாடல் விரைவில் வரும் என்பது தெரிகிறது.

பொறுங்க செல்லம் :

'இந்த மாதிரி ஏதாவது ட்வீட் போடுறீங்க... அப்புறம் நாங்க மண்டையை பிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கணும்.. ப்ளீஸ் சொல்லுங்க செல்லம்' என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, 'அதுக்குதான போடுறதே... ப்ளீஸ் வெய்ட் பண்ணுங்க செல்லம். அது பற்றிய முழு தகவல் நாளை வெளிவரும்' என விவேக் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

விளையாடலாமா :

தட் விளையாடலாமா மொமென்ட். புதிய செய்தி வழக்கம்போல தளபதி ரசிகர்களுக்காக... இன்று மாலை வெளியாகும்.

ப்ளீஸ் சொல்லுங்க :

நண்பா... ப்ளீஸ் எனக்கு மட்டும் சொல்லுங்க.... நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்.. ஆனா சொல்றதை ரிப்ளைலேயே சொல்லுங்க.. நம்புங்க யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்.

இதான் சஸ்பென்ஸ் :

என்னனு தெரியலைல... சஸ்பென்ஸோடையே வெய்ட் பண்ணுங்க...

English summary
Songs composed by AR Rahman for Vijay's 'Mersal' have become superhit. Vivek, who wrote all the songs, has now released a new information on Twitter. So it seems that another song will be coming out today from 'Mersal'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil