»   »  ஒரு டிக்கெட் - ஒரு ரூபாய் திட்டம் : 'துப்பறிவாளன்' மூலம் தொடக்கம்

ஒரு டிக்கெட் - ஒரு ரூபாய் திட்டம் : 'துப்பறிவாளன்' மூலம் தொடக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

திரையரங்கில் விற்கப்படும் சினிமா டிக்கெட்டுகளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தனியாக ஒதுக்கப்பட்டு அது விவசாயிகளின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார்.


ஆனால் இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.


அவர் படத்துக்கு கொடுக்கட்டும் :

அவர் படத்துக்கு கொடுக்கட்டும் :

திட்டத்தைக் கொண்டுவர நினைக்கிற விஷால் அவரது படத்திற்கு இதுபோல டிக்கெட் கட்டணத்தை விவசாயிகள் நலனுக்காக வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கட்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சொல்லி வந்தனர்.


திட்டம் செயல்படுத்தப்படும் :

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள தனது 'துப்பறிவாளன்' படத்தில் இந்தத் திட்டத்தை விஷால் செயல்படுத்துகிறார். இதுகுறித்து அவர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஒரு டிக்கெட் - ஒரு ரூபாய்

ஒரு டிக்கெட் - ஒரு ரூபாய்

'துப்பறிவாளன்' படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம், வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும்.


எல்லா காட்சிகளிலும்

எல்லா காட்சிகளிலும்

தமிழ் நாட்டில் 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் 'துப்பறிவாளன்' படம் திரையிடப்படுகிறது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகிறதோ, அத்தனை காட்சிகளிலும் விற்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்தும் ஒரு ரூபாய் வசூலித்து கொடுக்கப்படும்.' என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


பறக்கும் படை

பறக்கும் படை

தியேட்டர்களில் படத்தை செல்ஃபோனில் பதிவு செய்து பரபரப்புவதை தடுப்பதற்காகவும் அப்படிப் பதிவு செய்பவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் பிடித்து கொடுக்கவும் தமிழகமெங்கும் உள்ள விஷால் நற்பணி இயக்கம் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.


தீவிர கண்காணிப்பு

தீவிர கண்காணிப்பு

இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளிலும் கண்காணிக்க உள்ளார்கள். இந்த பறக்கும் கண்காணிப்பு படைக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம்.


English summary
Vishal announced that, one rupee per ticket price would be allocated and used for the benefit of the farmers. Vishal is implementing this project through 'Thupparivaalan' that got released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil