Just In
- 22 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 31 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 47 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
- 51 min ago
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
Don't Miss!
- Sports
ஓரமாக உட்கார்ந்து இருந்தேன்.. உங்கள் டீமை விட்டு போனதே சந்தோசம்.. ஐபிஎல் அணியை வெளுத்த இளம் வீரர்
- News
5 கிலோ தங்க கட்டி, ரூ.100 கோடி அன்னிய முதலீடு.. பால் தினகரன் நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ்
- Automobiles
ஸ்ட்ரீட் 750 பைக்குகளின் விற்பனை நிறுத்தம்!! விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக் இனி இதுதான்...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இயக்குனரானார் கனிகா.. அடுத்த அப்டேட் விரைவில் வெளிவரும் !
கேரளா: நடிகை கனிகா சினிமாவில் தனது புதிய அவதாரத்தை அறிவித்துள்ளார். முதல் முறையாக படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மலையாள திரைப்பட உலகில் பிரபலமானவர் தான் கனிகா. பாடகியாக இருந்து பின்னாளில் நடிகையாக மாறினார். திரைதுறைக்குள் ஒவ்வொரு வரும் ஒரு துறையை தேர்ந்தேடுத்து வருவார்கள் ஆனால் கனிகா பாடகியாக தான் அனைவருக்கும் தெரியும். பின் சென்னையில் நடைபெற்ற மாடல் அழகி போட்டியில் பங்கேற்றார். இதுவே இவருக்கு திரையுலகில் வர ஒரு பாதையாக அமைந்தது.

இயக்குநர் சுசி கணேசன் இவரின் புகைப்படத்தை ஒரு பத்திரிக்கையின் அட்டை படத்தில் பார்த்து இவரை தன் படத்தின் துணை கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இது தான் இவருக்கு முதல் திரைப்படம்.

பின் தமிழ்,தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்தார் கனிகா. சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வருவார் கனிகா. இவருக்கு ரதமிழில் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்த திரைப்படம் அஜீத் நடித்த வரலாறு தான் இதில் அப்பா அஜித்க்கு ஜோடியாக நடித்தார் கனிகா. தமிழில் இவர் நடித்த கடைசி திரைப்படம் இதுதான்.

பின்னர் மலையாள சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தினார் கனிகா. தொடர்ந்து அங்கு பல திரைப்படங்களில் நடித்தார். இவர் மலையாளத்தில் கடைசியாக மம்முட்டி நடித்த மாமங்கம் திரைப்படத்தில் நடித்தார். இவர் அடுத்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்

இவர் தமிழில் பல கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். மேலும், இவர் நடித்த பாக்கிய தேவதா படம் பல விருதுகளை குவிந்துள்ளது.

கனிகா தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தாம் ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும் இது ஒரு குறும்படம் என்றும் கூறியுள்ளார். "என மனதிற்கு மிக நெருக்கமான ஒரு விஷயம் பற்றி குறும்படம் எடுத்துள்ளேன். ஷூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது" என கனிகா தெரிவித்துள்ளார். இந்த குறும்படத்தின் தலைப்பு உள்ளிட்ட மற்ற விவரங்களை கனிகா இன்னும் வெளியிடவில்லை.