twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா: தென்னிந்திய சினிமாவுக்கு ஒரு வாரம் லீவு!

    By Shankar
    |

    சென்னை: சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு வாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படவுலகின் அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன.

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75-ம் ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வோடு சேர்த்து இந்தியத் திரைப்பட உலகின் 100-வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது பிலிம்சேம்பர்.

    இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் மற்றும் தென்னிந்தியாவின் நான்கு மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

    வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, தேதிகளில் அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

    21-ம் தேதி மலையாளம்

    21-ம் தேதி மலையாளம்

    21-ம்தேதி காலை மலையாளத் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சி 4 மணி நேரம் நடைப்பெறும். அன்றைய தினம் மாலை 4 மணி நேரம் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

    கன்னடம், தெலுங்கு

    கன்னடம், தெலுங்கு

    22-ம் தேதி காலை கன்னடத் திரைப்பட நடிகர்கள் கலைஞர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலை தெலுங்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் 4 மணி நேரம் நடைபெறும்.

    கலைஞர்களுக்கு விருந்து

    கலைஞர்களுக்கு விருந்து

    23-ம் தேதி மாலை தென்னிந்திய மொழி கலைஞர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்படுகிறது. இதில் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

    பிரமாண்ட நிறைவு விழா

    பிரமாண்ட நிறைவு விழா

    24-ம்தேதி இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத வகையில் பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா முதல் அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் அனைத்து மொழியைச் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

    இந்த விழா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஸ்டுடியோ முதலாளிகள் என அத்தனை சங்கங்களையும் சார்ந்தவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது.

    ஒரு வாரம் லீவு

    ஒரு வாரம் லீவு

    இந்த விழாவில் கலந்து கொள்ளவும் நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மற்றும் பங்களிப்புகளுக்காகவும் நான்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் சாதனையாளர்கள் சென்னையில் சங்கமிக்க வேண்டும் என்பதால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் உலகமெங்கும் செப்டம்பர் 18, முதல் 24 வரை நடைபெறாது என பிலிம்சேம்பர் அறிவித்துள்ளது. அனைத்து மாநில சினிமா அமைப்புகளும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.

    சென்னையை ஜொலிக்க வைக்க முயற்சி

    சென்னையை ஜொலிக்க வைக்க முயற்சி

    இது மட்டுமல்லாமல் சென்னை நகரமெங்கும் வண்ணமயமான அலங்காரங்கள், திரையரங்குகளில் சிறந்த இந்தியத் திரைப்படங்கள், பூங்காக்களிலும் சென்னையில் முக்கிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், திரைப்பட போட்டிகளில் வெற்றிப் பெற்ற ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைப்பெறும். தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சேர்ந்த 2 அயிரத்திற்கும் மேற்பட்ட அத்தனை கலைஞர்களும் சென்னையில் சங்கமிக்கப் போகிறார்கள்.

    English summary
    South Indian cinema trade announced one week holiday for shooting due to the 100 years celebration of Indian cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X