»   »  மே 1... யுட்யூபும் சமூக வலைத்தளங்களும் அதிர்ந்த நாள்! - ஒரு ரசிகனின் அனுபவம் #OneYearOfKabaliTeaser

மே 1... யுட்யூபும் சமூக வலைத்தளங்களும் அதிர்ந்த நாள்! - ஒரு ரசிகனின் அனுபவம் #OneYearOfKabaliTeaser

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு டீசர் வெளியிடப்படும் என்று தெரிந்த நொடியிலிருந்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்தியாவில் காலை 11 மணி என்றால்.. இங்கே (யுகே) காலை 6.30.

One Year of Kabali teaser

5.30க்கே அலாரம் வைத்து.. பல் தேய்த்து, முகம் கழுவி... தூங்கிக் கொண்டிருக்கும் மனைவி, மகளைத் தொந்திரவு செய்யாமல் அடுத்த அறைக்குச் சென்று.. ஹெட் செட் & மொபைல் ஃபோனுடன் ரெடியாக இருந்தேன்... அது என்ன இருந்தேன்... இருந்தோம். உலகெங்கும் உள்ள 'தலைவர் ரசிகர்'களில் பலரும் இப்படித்தான் இருந்தார்கள்.

வாட்ஸப் க்ரூப்பிலும், ட்வீட்டரிலும் அட்டகாசமாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க டீசர் வெளியானது...

ஒரு ஃபேக்டரியின் சங்கொலியைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை அதிர தலைவர் மெதுவாக, திடமாக, அழுத்தமாக தலையை மெதுவாக நடந்து வர.... வீட்டில் திரையரங்கில் இருப்பது போன்ற உணர்வில் 'த்த்த்த்தலைவா' என சவுண்டோடு விசில் பறந்தது.

"யார்டா , அந்தக் கபாலி" வரச் சொல்லுடா அவனை," என்ற கிஷோரை ஃப்ரெண்ட்லியாக "அர்ச்சித்து" விட்டு (ஹிஹி....ஹிஹி...) நக்கலாக நம்பியார் ஸ்டைலில் 'கெத்து' காட்டிய தலைவரை இமைக் கொட்டாமல் பார்த்த பிரமிப்பு நீங்கும் முன்னரே... இளம் ரஜினியின் ஸ்டைலான தலைக் கோதலுடன், வேகமான நடையைப் பார்த்து... ஒன்றும் புரியாமல் ஆனந்த அதிர்ச்சியில் இருக்கும் போது .. அழுத்தமான மகிழ்ச்சியுடன் டீசர் முடிந்திருந்தது! டீசர்னா எப்படி இருக்கணும் என்று பாடம் எடுத்திருந்தார் ரஞ்சித்!

குறிப்பு: கபாலி டீசரை இதுவரை 3.37 கோடி பேர் பார்த்துள்ளனர். தமிழில் யாராலும் தொட முடியாத சாதனை இது.

#மகிழ்ச்சி

- லண்டனிலிருந்து ராம் சுவாமிநாதன்

English summary
May 1 is an unforgettable day for every Rajinikanth fans, because on the same day the superstar's Kabali teaser released with a bang.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil