»   »  "கிம்"மைப் பார்த்து ‘வெங்காய மூட்டை’ என வர்ணித்த நடிகர் ரிஷி கபூர்!

"கிம்"மைப் பார்த்து ‘வெங்காய மூட்டை’ என வர்ணித்த நடிகர் ரிஷி கபூர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல அமெரிக்க மாடல் கிம் காதர்ஷியனை வெங்காய மூட்டையோடு ஒப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகரான ரிஷி கபூர்.

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் ரிஷி கபூரையும், சர்ச்சைகளையும் என்று கூறலாம். அந்த அளவிற்கு பாலிவுட்டின் சர்ச்சை மன்னனாக வலம் வருகிறார் ரிஷி கபூர்.

கடந்தாண்டு பாலிவுட் நடிகை ட்விங்கிள் கண்ணா தனது பிறந்த நாளை கொண்டாடியபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரிஷி கபூர் டிவிட்டரில் வெளியிட்ட கருத்து சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது பிரபல அமெரிக்க மாடல் அழகியான கிம் காதர்ஷியனை வித்தியாசமாக வர்ணித்து புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரிஷி கபூர்.

அதாவது சிவப்பு நிற வலை போன்ற உடையில் உள்ள கிம்மை, வெங்காய மூட்டையோடு வர்ணித்து, அதேபோன்று சிவப்பு நிற வலை மூட்டையில் வெங்காயம் அடைத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளார் ரிஷி கபூர்.

இந்த பதிவிற்கு அவரைப் போலவே அவரது ரசிகர்களும் விதவிதமான கமெண்டுகளைப் பகிர்ந்துள்ளனர்.

English summary
The bollywood actor Rishi Kapoor compared American model Kim kardashian with onion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil