»   »  அன்பானவன் அடங்காதவன் அசராதவன்... பக்கா சிம்பு ரசிகர்களுக்கான படம்!

அன்பானவன் அடங்காதவன் அசராதவன்... பக்கா சிம்பு ரசிகர்களுக்கான படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் பக்கா சிம்பு ரசிகர்களுக்கான படம் என பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிம்பு நடித்துள்ள அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் முதல் பாகம் இன்று வெளியானது.

யுஏ

யுஏ

வம்புக்கு பெயர் போன சிம்பு, முதல் படத்திலேயே ஆபாச சர்ச்சைக் கிளப்பிய ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் என்பதால், எதிர்ப்பார்த்த மாதிரியே யுஏ சான்றுதான் படத்துக்குக் கிடைத்தது.

லேட்

லேட்

இந்தப் படம் இன்று காலை எதிர்ப்பார்த்த நேரத்தில் வெளியாகவில்லை. 11 மணிக்குப் பிறகுதான் க்யூபுக்கான கேடிஎம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

பசங்களுக்கான படம் சார்

பசங்களுக்கான படம் சார்

படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விமர்சனங்களை லைவாகப் போட ஆரம்பித்துவிட்டனர். இது பசங்களுக்கான படம் சார்... அவ்வளவுதான் என பலர் குறிப்பிட்டிருந்தனர்.

சிம்பு ரசிகர்களுக்கு

சிம்பு ரசிகர்களுக்கு

'இந்தப் படம் பக்கா சிம்பு ரசிகர்களுக்கான படம். மற்றவர்களுக்கு எப்படியோ' என்று பெரும்பாலானோர் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மூன்று ஜோடிகள்

மூன்று ஜோடிகள்

ஸ்ரேயா, தமன்னா, சனா கான் என மூன்று ஜோடிகள் இந்தப் படத்தில் சிம்புவுக்கு. காதல், ஆக்ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பதாக சிலர் பாஸிடிவாகக் கூறியுள்ளனர்.

சிரிப்பு

சிரிப்பு

மொட்டை ராஜேந்திரன், கோவை சரளாவின் காமெடிக் காட்சிகளில் சிரிப்பு கன்ஃபர்ம் என்கிறார் இன்னொரு வலைதளப் பயனாளர்.

தெறிக்க விட்ட யுவன்

தெறிக்க விட்ட யுவன்

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு சிம்புவும் யுவனும் இணைந்துள்ள படம் இது. இசையும் பாடல்களும் தெறிக்கின்றன என பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் பாகம் வேறா?

இரண்டாம் பாகம் வேறா?

பலரது ஒருமித்த கருத்து... 'முதல் பாகவே எப்போது முடியும் என இருந்தோம்... இதில் இரண்டாம் பாகத்துக்கு வேறு லீட் கொடுத்திருக்கிறார்கள்...' என்பதாக உள்ளது.

English summary
Social media comments on Simbu's Anbanavan Adangathavan Asarathavan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil