twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச மகளிர் தினத்தில் பன்னாட்டு கவியரங்கம்...சாதனை மகளிருக்கு விருது

    |

    நியூயார்க் : தமெரிக்கா டிவி, தில்லி கலை இலக்கியப் பேரவை, டோக்கியோ தமிழ்ச் சங்கம், மெல்பர்ன் தமிழ்ச்சங்கம், டெக்னோ கம்பெனி கானா தமிழ் அசோசியேசன், நைஜீரியா தமிச்சங்கம், பஹ்ரைன் ஸ்ரீநாத் இலவநேட்டர்ஸ் செந்தமிழ் சொல்வேந்தர் மன்றம், ஐதராபாத் டாப்வியூ இன்ஃபோடெக் ஆகிய அமைப்புக்கள் இணைந்து மார்ச் 6 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெற்றும் மகளிர் தின கொண்டாட்டத்தில் பன்னாட்டுக் கவியரங்கம், மகளீர் சாதனையாளர் விருதுகள் ஆகியன நடைபெற உள்ளன. உரத்த சிந்தனை துணைத் தலைவர் பத்மினி பட்டாபிராமன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நாவலாசிரியர் மற்றும் எழுத்தாளர் வேதா கோபாலன் பங்கேற்க உள்ளார்.

    மகளிர் தின கொண்டாட்டம்

    மகளிர் தின கொண்டாட்டம்


    தில்லி கணேச நாட்டியாலயா நிறவனர் சரோஜா வைத்தியநாதன் கவுரவ விருந்தினராக பங்கேற்கும் இவ்விழாவில் கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்க செயலாளர் சித்ரா சிவராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்ற உள்ளார். தில்லி தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவரும் எழுத்தாளருமான ரமாமணி சுந்தர் தொடக்கவுரை ஆற்ற உள்ளார்.

    ஆன்லைனில் பன்னாட்டு கொண்டாட்டம்

    ஆன்லைனில் பன்னாட்டு கொண்டாட்டம்

    சென்னையில் இருந்து சன் சிங்கர் புகழ் சாய்காயத்ரி, கோவையில் இருந்து சாக்சபோன் ராஜூ ஆகியோர் இறை வணக்க பாடல் பாட உள்ளனர். ஒட்டுமொத்த நிகழ்வையும் அமெரிக்காவிலிருந்து ப்ரீத்தி மோகன் நெறியாள்கை செய்ய உள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை தில்லி கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பா.குமார் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவை தலைவர் ப.அறிவழகன் ஆகியோர் கவனிக்க உள்ளனர்.

    பெண் கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம்

    பெண் கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம்

    புதுச்சேரி தூர்தர்ஷன் நிலைய நிகழ்ச்சி தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி நடுவராக செயல்படும் பன்னாட்டு கவியரங்கம், யாதுமாகி நிற்கும் பெண்ணே என்ற பொது தலைப்பில் நடைபெற உள்ளது. இதில் சிங்கப்பூர், இந்தியா, நைஜீரியா, கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து பெண் கவிஞர் பங்கேற்க உள்ளார்.

    சாதனை பெண்களுக்கு விருது

    சாதனை பெண்களுக்கு விருது

    சிங்கப்பூரை சேர்ந்த கவிஞர் இன்பாவிற்கு கவி தாய் விருதும், அமெரிக்காவை சேர்ந்த லாவண்யா அழகேசனுக்கு சமூக நல விரும்பி விருதும், ஆஸ்திரேலியா டாக்டர் வஜ்னா ரஃபீக்கிற்கு மருத்து திலகம் விருதும், துபாய் ஜெசீலாவுக்கு பல் துறை வித்தகி விருதும், இங்கிலாந்து ஆர்ஜே விஜயலட்சுமி திருஞானராஜாவுக்கு வானொலிக் குயில் விருதும், இங்கிலாந்து ஆர்ஜே தங்க ரேகா வெங்கட்டிற்கு வானொலி குயில் விருதும், மஸ்கட் தருமாம்பாள் சீனுவாசனுக்கு நாவரசி விருதும் வழங்கப்பட உள்ளது.

    சூம் செயலி வழியாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் வாழ்த்துரையும், நன்றியுரையும் வழங்க உள்ளனர்.

    Online International Womens day celebrations to be held on March 6th
    Online International Womens day celebrations to be held on March 6th

    English summary
    Online International Women's day celebrations to be held on March 6th
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X