»   »  புதுப் படம் பார்க்க கிளம்பியாச்சா?: முதலில் இதை படிச்சிட்டுப் போங்க

புதுப் படம் பார்க்க கிளம்பியாச்சா?: முதலில் இதை படிச்சிட்டுப் போங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளிக்கிழமையான இன்று கோலிவுட்டில் ஒரேயொரு படம் அதுவும் புதுமுகங்களின் படம் மட்டுமே ரிலீஸாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை என்றால் நிச்சயம் புதுப்படங்கள் ரிலீஸ் இருக்கும் என்பது சினிமா ரசிகர்கள் அறிந்தது. இன்று வெள்ளிக்கிழமையாச்சே என்னென்ன படங்கள் ரிலீஸாகியுள்ளது என்று தேடுகிறீர்களா?

இன்று ஒரேயொரு படம் தான் ரிலீஸாகியுள்ளது.

இனி அவனே

இனி அவனே

புதுமுகங்கள் நடித்துள்ள இனி அவனே என்ற ஒரேயொரு தமிழ் படம் தான் இன்று வெளியாகியுள்ளது. பெரிய ஹீரோக்கள், பிரபல இயக்குனர்களின் படங்கள் எதுவுமே ரிலீஸாகவில்லை.

ஏன்?

ஏன்?

தீபாவளியையொட்டி கடந்த வாரம் கொடி, காஷ்மோரா என இரண்டு பெரிய படங்கள் ரிலீஸாகி இரண்டுமே ஹிட்டாகியுள்ளன. தீபாவளிக்கு அடுத்த வாரம் படத்தை வெளியிட்டால் ஓடாது என்று பெரும் தலைகள் ஒதுங்கிவிட்டனர்.

சிம்பு படம்

சிம்பு படம்

அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது 11ம் தேதி சிம்புவின் அச்சம் என்பது மடமையடா, ஜி.வி. பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, வெங்கட் பிரபு இயக்கியுள்ள சென்னை 28 II, ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்துள்ள மீன்குழம்பும் மண்பானையும், விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ஆகிய 5 படங்கள் ரிலீஸாகின்றன.

விஷால்

விஷால்

அதற்கும் அடுத்த வெள்ளிக்கிழமை விஷாலின் கத்திச் சண்டை, ஜீவாவின் கவலை வேண்டாம், விஜய் ஆண்டனியின் சைத்தான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

English summary
Only one tamil movie has hit the screens this friday. Next friday will be a colourful one with young heroes' movies getting released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil