அப்போ இந்த தீபாவளிக்கு ரெண்டே படங்கள்தானா?
காஷ்மோரா, கொடி, கத்தி சண்டை, கடவுள் இருக்கான் குமாரு, சைத்தான் ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதாக சிலவாரங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது. ஆனால், தீபாவளி நெருங்கும் வேளையில் இவற்றில் சில படங்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டன.

காஷ்மோரா, கொடி ஆகிய இரு பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதர படங்களான கத்தி சண்டை, கடவுள் இருக்கான் குமாரு, சைத்தான் ஆகிய படங்கள் தீபாவளி ரேஸிலிருந்து வெளியேறியுள்ளன.

அதே தினத்தில் கடலை என்கிற மகாபா ஆனந்த் நடித்த படம் வெளியாகக் கூடும் என்று தெரிகிறது. ஆனால் இந்தப் படமெல்லாம் பாக்ஸ் ஆபீஸ் லிஸ்டிலேயே இல்லாத ஒன்று.
ஆக தீபாவளி தினத்தன்று காஷ்மோரா, கொடி ஆகிய இரு படங்களுக்குத்தான் செம போட்டி!
Comments


Click it and Unblock the Notifications