»   »  அப்பாடா... இந்த வெள்ளியன்று ரெண்டே படங்கள்தான்!

அப்பாடா... இந்த வெள்ளியன்று ரெண்டே படங்கள்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பெரும் படங்கள் வெளியாவதற்கு முன்பாக தங்களின் சின்னப் படங்களை வெளியிட்டுவிடும் நோக்கில் வாரம்தோறும் சராசரியாக ஆறேழு படங்கள் வெளியாகி வந்தன. இரண்டு வாரங்களில் 20 படங்கள் வெளிவந்து காணாமல் போனதும் நடந்தது.

இந்த வாரம் அந்தத் துன்பமில்லை. ஆம், ஜஸ்ட் இரண்டே படங்கள்தான் வெளியாகியுள்ளன.

ஒன்று சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. இன்னொன்று பாக்யராஜ் நடித்துள்ள துணை முதல்வர்.

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது

மருதுபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். மதுராஜ் வெளியிட்டுள்ளார். சென்னைக்கு வந்த கிராமத்து இளைஞன் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி படும் பாடுகள்தான் படம்.

துணை முதல்வர்

துணை முதல்வர்

கே பாக்யராஜ் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாயகனாக நடித்துள்ள படம். அவருடன் ஜெயராம், ஸ்வேதா மேனன் மற்றும் சந்தியா நடித்துள்ளனர். விவேகானந்தன் இயக்கியிருக்கிறார்.

தொடரும் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7 ஆதிக்கம்..

தொடரும் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7 ஆதிக்கம்..

கடந்த வாரம் வெளியான ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7 படம் இந்த வாரமும் பாக்ஸ் ஆபீசில் கலக்குகிறது.

அடுத்த வாரம்...

அடுத்த வாரம்...

அடுத்த வாரம் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி, லாரன்ஸின் காஞ்சனா 2 வெளியாகவிருக்கின்றன.

English summary
There are only two straight Tamil Movies Chennai Ungalai Anbudan Varaverkirathu and Thunai Muthalvar releasing this Firday.
Please Wait while comments are loading...