»   »  விஜய் சேதுபதியின் 8 கெட்டப், 'அந்த 4' நிமிட ரகசியம் தெரியுமா?

விஜய் சேதுபதியின் 8 கெட்டப், 'அந்த 4' நிமிட ரகசியம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் குறித்த இரண்டு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

சரவெடி

சரவெடி

படம் முழுக்க சிரிப்பு சரவெடி இருக்கும் என்பது நேற்று வெளியான வீடியோ மூலம் தெரிகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி 8 வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்.

கெட்டப்

கெட்டப்

விஜய் சேதுபதி படம் முழுக்க 8 கெட்டப்புகளில் வர மாட்டாராம். ஒரேயொரு பாடலில் மட்டும் 8 கெட்டப்புகளில் வந்து அசத்துவாராம். இந்நிலையில் படம் குறித்த மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே டேக்

ஒரே டேக்

படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியில் விஜய் சேதுபதி தொடர்ந்து 4 நிமிடம் நீளமான வசனம் பேச வேண்டுமாம். அந்த வசனத்தை அவர் ஒரே டேக்கில் பேசி படக்குழுவை அதிர வைத்தாராம்.

தியேட்டர்

தியேட்டர்

விஜய் சேதுபதி பேசும் அந்த நீளமான வசனக் காட்சி வரும்போது 4 நிமிடம் தியேட்டரில் ஒரே விசிலும், கைதட்டலுமாக நிச்சயம் இருக்கும் என்று படக்குழு நம்புகிறது.

English summary
Oru Nalla Naal Paathu Solren team has revealed an important information about Vjay Sethupathi's mass scene in the upcoming movie that is hitting the screens on february 2nd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil