»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி அருகே ராதாரவி பேச இருந்த மேடை சரிந்து விழுந்தது. இதில் ராதாரவி மட்டும் மாட்டிக் கொண்டார்.மற்றவர் தப்பினர். பின்னர் சரிந்த மேடையிலேயே ராதாரவி பேசி விட்டுச் சென்றார்.

நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூரில் ராதாரவி பேச அ.தி.மு.க சார்பில் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பொதுக் கூட்டம் பிற்பகலில் நடப்பதாக இருந்தது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

மாலையில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்திற்கு காலையிலிருந்தே கூட்டம் கூடத் தொடங்கியது. எனவேமேடையில் உள்ளூர் பிரமுகர்கள் பேச ஆரம்பித்தனர். இவர்களது பேச்சையடுத்து மாலையில் பொதுக் கூட்டம்தொடங்கியது.

மேடையில் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலர் அனந்த கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., உச்சிக்கவுடர்,ஆகியோர் உள்பட நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். அப்போது ராதாரவி மேடைக்கு வந்தார்.

அவர் வந்ததும் உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு, மேடை ஏறி அவருக்குவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். 50 பேருக்கும் மேல் மேடையில் தொண்டர்கள் ஏறியதால் அந்தமேடை அப்படியே சரிந்து விழுந்தது.

அபபோது மேடையில் இருந்த அனைவரும் தப்பி ஓடினர். அப்போது மேடையில் இருந்த ராதாரவி மட்டும் சரிந்தமேடையில் மாட்டிக் கொண்டார். அவரை தொண்டர்கள் மீட்டனர். பின்னர் ராதா ரவி, சரிந்த அதே மேடையில்பேசி, பொதுக் கூட்டத்தை முடித்து வைத்தார்.

Read more about: admk, ooty, radha ravi, speech

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil