தலைவர் 169 டைட்டிலுக்கு இத்தனை பெயர்களா...எது நல்லா இருக்கும்ன்னு நீங்களே சொல்லுங்க
சென்னை : தலைவர் 169 ஷுட்டிங் துவங்கா விட்டாலும் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து அது பற்றிய பேச்சு தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இதில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது படத்தின் டைட்டில் தான்.
ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க போவதாக பிப்ரவரி மாதமே அறிவித்து விட்டது சன் பிக்சர்ஸ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க போகிறார் என்றும் கூறி விட்டார்கள்.
அறிவிப்பு வெளியிடப்பட்டு 4 மாதங்கள் ஆன பிறகும் ஷுட்டிங் எப்போது துவங்க போகிறார்கள் என்ற தகவல் கூட இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் பீஸ்ட் படத்தில் விட்ட இடத்தை தலைவர் 169 படத்தில் எப்படியாவது பிடித்து விட வேண்டும், படத்தை மாஸ் ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற முடிவோடு நெல்சன் திலீப்குமார் வேலை செய்வதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்
தலைவர் 169 படம் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமாரும் தலைவர் 169 படத்தில் இணைந்துள்ளார். ஆனால் அவர் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக திரைக்கதை உருவாக்கத்திற்கு உதவ போகிறார் என கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன் ரோல் இதுவா
தற்போது லேட்டஸ்ட் தகவலாக, தலைவர் 169 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதுவும் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் இளமை கால ரஜினி ரோலில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, தலைவர் 169 படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுத போகிறார் என்றும் கூறப்பட்டது.

ஷுட்டிங் எப்போப்பா ஆரம்பிப்பீங்க
தலைவர் 169 படத்தின் ஷுட்டிங்கை ஜுலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், படத்தின் டைட்டில் பற்றிய தகவல்கள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. ரஜினியின் தலைவர் 169 படத்திற்கு இதுவரை 4 டைட்டில்கள் வைக்கப்பட உள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

டைட்டிலுக்கு இத்தனை பெயர்களா
இதுவரை வெளியான தகவல்களின் படி, தலைவர் 169 படத்திற்கு கிரிமினல், சாம்ராட், ஜெயிலர், பாஸ் ஆகிய பெயர்கள் டைட்டிலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாம். இவற்றில் ஏதாவது ஒன்றை தான் டைட்டிலாக வைக்க போவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதுமே, ஜெயிலர் என்ற டைட்டிலை வைத்து போஸ்டரே தயார் செய்து விட்டார்கள் ரஜினி ரசிகர்கள். படத்தின் ஷுட்டிங் துவங்கும் தேதியே இதுவரை கன்ஃபார்ம் ஆகாத நிலையில் டைட்டிலையும் தேர்வு செய்து, அதை வைத்து போஸ்டரையும் உருவாக்கி செம ஃபாஸ்டாக இருந்து வருகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











