»   »  ஆரஞ்சு மிட்டாய்.. இனிக்குதா, கசக்குதா, புளிக்குதா.. எப்படிப்பா இருக்கு?

ஆரஞ்சு மிட்டாய்.. இனிக்குதா, கசக்குதா, புளிக்குதா.. எப்படிப்பா இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடித்து அவரே சொந்தமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ஆரஞ்சு மிட்டாய், இன்று உலகம் முழுவதும் சுமார் 175 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

55 வயது முதியவராக ஆரஞ்சு மிட்டாயில் நடித்து அசத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி, இதனால் ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க ஆர்வமுடன் தியேட்டர்களில் குவிகின்றனர்.


சமீபகாலமாக மது அருந்தும் காட்சிகள் இல்லாமல் தமிழில் எந்தப் படங்களும் வெளிவருவதில்லை, ஆனால் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் மருந்துக்குக் கூட புகைபிடிக்கும் காட்சிகளோ மது அருந்தும் காட்சிகளோ இல்லை.


காக்கா முட்டை திரைப்படத்தின் வரிசையில் இணைந்து இருக்கும் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தின் கதை மற்றும் நடித்தவர்கள் பற்றி இங்கே காணலாம்.


ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை

ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை

55 வயதான கைலாசம்( விஜய் சேதுபதி) என்னும் முதியவருக்கு ஒருநாள் கடுமையான நெஞ்சுவலி வருகின்றது, 108 ற்கு போன் செய்து ஆம்புலன்சை கூப்பிடுகிறார். ஆம்புலன்ஸ் வருகின்றது டிரைவருடன்(ஆறுமுகம்) அவசர நிலை உதவியாளர் (ரமேஷ் திலக்) ஒருவரும் உடன் வருகின்றார்.


ஆம்புலன்சில் செல்லும்பொழுது ரமேஷ் திலக்கிற்கு அவரது காதலியிடம் இருந்து தொடர்ந்து தொடர்ந்து போன் வருகிறது, மறுபக்கம் ரமேஷ் திலகின் மேலதிகாரி நோயாளியைக் கொண்டுவர இவ்வளவு நேரமா? என்று போன் செய்து கத்துகிறார்.


இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் ஆம்புலன்சின் டயர் பஞ்சராக, ரமேஷ் திலக்கிற்கு உதவி செய்ய முன்வரும் விஜய் சேதுபதி ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுகிறார்.


ரமேஷிற்கு அவரின் காதலியுடன் இணைந்தாரா? விஜய் சேதுபதி காப்பற்றப்பட்டாரா? போன்ற வினாக்களுக்கு விடையை சொல்லும் கிளைமாக்ஸ் உடன் முடிகின்றது ஆரஞ்சு மிட்டாய்.விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாயிலும் வித்தியாசத்தைக் காட்டி இருக்கிறார். கதை எழுதி தயாரித்து நடித்திருப்பதுடன், 2 பாடல்களை எழுதி பாடகராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.


கதையின் நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி தான் மட்டுமே முழுப் படத்தையும், ஆக்கிரமிக்காமல் மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டியே ஆகவேண்டும்.


ஆரஞ்சு மிட்டாய் படத்தில் 55 வயது முதியவராக நடித்து அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவின் நிறம் உங்களால் மாறுகின்றது விஜய் சேதுபதி வாழ்த்துக்கள்..
ரமேஷ் திலக்

ரமேஷ் திலக்

விஜய் சேதுபதியின் அடாவடிகளைப் பொறுத்துக் கொண்டு காதலி, மேலதிகாரி இருவரின் போன் கால்களையும் சமாளித்து... நடிப்பில் விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டிருக்கிறார். ஆம்புலன்ஸ் கவிழும் போது அதைச் சரிசெய்ய முயற்சிப்பது, விஜய் சேதுபதி நெஞ்சுவலியில் சரிய அவரைக் காப்பாற்ற போராடுவது என்று ஒரு முழுகதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் ரமேஷ் திலக்.


பிஜு விஸ்வநாத்

பிஜு விஸ்வநாத்

விஜய் சேதுபதியுடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கும் பிஜு விஸ்வநாத் படத்தை இயக்கியதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். ஆரஞ்சு மிட்டாயின் ஒளிப்பதிவு சில இடங்களில் கவர்ந்தாலும் பல இடங்களில் தொய்வடைந்து விடுகிறது, இன்னும் சற்று நன்றாக செய்திருக்கலாம்.


ஜஸ்டின் பிரபாகரன்

ஜஸ்டின் பிரபாகரன்

கமர்ஷியல் இல்லாத ஆரஞ்சு மிட்டாயில் இசையின் முக்கியத்துவம் அதிகம் இருக்கவேண்டும் ஆனால் சில இடங்களில் நெருடும் இசை மற்ற இடங்களில் கவரவில்லை.
ஜஸ்டின் பிரபாகரன், இசை படத்திற்கு பலத்தை கொடுப்பதை விட பலவீனமாக மாறியிருக்கின்றது என்றே சொல்லவேண்டும்.


ஆரஞ்சு மிட்டாயின் இனிப்பு மற்றும் புளிப்பு

ஆரஞ்சு மிட்டாயின் இனிப்பு மற்றும் புளிப்பு

1 மணி நேரம் 40 நிமிடங்கள் என்று மிகக்குறைந்த நேரத்தில் படத்தை எடுத்திருப்பது, விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் கமர்ஷியல் நெடி இல்லாதது ஆகியவற்றுடன் மது மற்றும் புகை இல்லாமல் படத்தை எடுத்திருப்பது ஆரஞ்சு மிட்டாயின் பலமாக மாறியிருக்கின்றது.


ஆரஞ்சு மிட்டாயின் கசப்பு

ஆரஞ்சு மிட்டாயின் கசப்பு

தொய்வான திரைக்கதை, இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை ஆங்காங்கே படத்தை மிக மெதுவாக கொண்டுசென்று ஆரஞ்சு மிட்டாயை சில இடங்களில் கசப்பு மிட்டாயாக மாற்றி இருக்கின்றது.


ஒருமுறை ஆரஞ்சு மிட்டாயை சுவைத்துப் பார்க்கலாம்...English summary
Orange Mittai Starring Vijay Sethupathi, Ramesh Thilak, Arumugam Bala and Aashritha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil