»   »  சர்வதேச பட விழாவில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஒரு கிடாயின் கருணை மனு'!

சர்வதேச பட விழாவில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஒரு கிடாயின் கருணை மனு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை பார்த்த விழா குழுவினர் படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இந்தப் படத்தில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரவீணா அறிமுகமாகிறார். இப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா தயாரித்துள்ளனர்.


Oru Kidayin Karunai Manu gets big response in NY festival

3 நாட்களில் நடக்கும் கதை இது. வேண்டுதலுக்காக பலியிட ஒரு ஆடு கோவிலுக்கு கொண்டு போகப்படுகிறது. அப்போது நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள்தான் படம்.


சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தைப் பார்த்த இந்தியர்கள் படக்குழுவைப் பாராட்டியுள்ளனர்.


நமது மண்ணின் பெருமையையும், குணத்தையும் பறைசாற்றும் வகையில் உள்ள ஒரு கிடாயின் கருணை மனு' தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் என படத்தைப் பார்த்த சர்வதேச படக் குழுவினர் கூறினார்களாம்.

English summary
Oru Kidayin Karunai Manu has got rave response at New York film festival.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil