»   »  என்னையும் படத்தையும் காப்பாத்துங்க! - ஒரு இயக்குநரின் வேண்டுகோள்

என்னையும் படத்தையும் காப்பாத்துங்க! - ஒரு இயக்குநரின் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு மெல்லிய கோடு படம் மீண்டும் வெளியாகிறது. இதையொட்டி இயக்குநர் ஏ எம் ஆர் ரமேஷ், தன் படத்தைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்ஷயா கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரித்த படம் 'ஒரு மெல்லிய கோடு'. இந்தப் படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கன்னடத்தில் இந்தப் படம் கேம் என்ற பெயரில் தயாரானது.

Oru Melliya Kodu to release in July 1st

கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். இவர்களுடன் மனிஷா கொய்ராலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ஏற்கெனவே கடந்த ஏப்ரலில் வெளியானது. ஆனால் போதிய கவனம் பெறவில்லை. எனவே சில தினங்களில் திரையிடுவதை நிறுத்திவிட்டார் இயக்குநர்.

இப்போது மீண்டும் புதிதாக இந்தப் படத்தை வெளியிடுகிறார் ரமேஷ். இதுகுறித்து அவர் கூறுகையில், "அன்பு நண்பர்களுக்கு... நான் டைரக்டர் ஏஎம்ஆர் ரமேஷ்... நான் இயக்கிய ஒரு மெல்லிய கோடு படம் பலதரப்பட்ட பிரச்சனைகளிலிருந்து மீண்டு ஜுலை 1ம் தேதி வெளியாகிறது. தயவு செய்து என்னையும் படத்தையும் காப்பாற்றும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

English summary
AMR Ramesh's Oru Melliya Kodu, a crime Thriller is releasing again all over the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil