»   »  ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், நல்ல ஓபனிங்!

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், நல்ல ஓபனிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மக்களின் கருத்து

விஜய் சேதுபதி பல்வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து பிப்ரவரி 2 அன்று வெளியான படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். விஜய் சேதுபதி படங்களில் பெரிய ஓபனிங்குடன் வெளியான படம் என்ற பெருமை இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

பி.ஆறுமுக குமார் இயக்கி உள்ள இப்படம் ரீலீசுக்கு முன் மிகப் பெரும் எதிர்பார்ப்பை வியாபார வட்டத்திலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருந்தது.

Oru Nalla Naal Paarthu Solren BO report

விஜய் சேதுபதி நடித்து வெளியான படங்கள் தமிழ் நாட்டில் அதிகபட்சம் 8 கோடிக்கு மேல் வருமானத்தை கொடுத்தது இல்லை.

இருப்பினும் ஒரு நல்ல நாள் பார்த்துசொல்றேன் படம் தமிழ்நாடு உரிமை 10 கோடிக்கு அவுட்ரேட் அடிப்படையில் வாங்கப்பட்டிருந்தது.

அதிக திரைகளில் இந்த படம்வெளியானது. முன்பதிவில் சென்னை போன்றே பிறநகரங்களில் உள்ள தியேட்டர்களிலும் அதிகமாக இருந்தது.

விஜய் சேதுபதி படங்களுக்கு குறைந்தபட்ச ஓபனிங் எப்போதும் இருக்கும்.

இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நடித்திருப்பதால் தென் மாவட்டங்களில் கூடுதல் ஓபனிங் இருந்தது.

விஐய் சேதுபதி படத்திற்கு போட்டியாக மற்ற நான்கு படங்களும் இல்லை என்பதால் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

Oru Nalla Naal Paarthu Solren BO report

வெள்ளி, சனி, ஞாயிறு வரை ஒரே மாதிரியான திருப்திகரமான வசூல் இருந்தது இந்தப் படத்துக்கு. ஆனால் திங்கள்கிழமை வழக்கம் போல கூட்டம் குறைந்ததால், அதை அதிகரிக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் மும்முரமாக உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் முதல் மூன்று நாட்களில் சுமார் 7 கோடி நரை மொத்த வசூல் செய்திருக்கிறது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் ரிபோர்ட்.

Oru Nalla Naal Paarthu Solren BO report

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் என இரட்டை நாயகர்கள் நடித்துள்ள படத்திற்கு இன்னும் கூட வசூல் இருந்திருக்க வேண்டும். ஆனால் விசேஷ நாள், விடுமுறை நாட்கள் இல்லாததால் இந்த நிலை என்கிறார்கள்.

English summary
Here is the BO report of Vijay Sethupathy's Oru Nalla Naal Paarthu Solren.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil