»   »  'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' - ஓவர்சீஸ் ட்விட்டர் விமர்சனம்

'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' - ஓவர்சீஸ் ட்விட்டர் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு நல்ல நாள் பார்த்துச்சொல்றேன் படத்தின் வெளிநாடு வாழ் இந்தியா மக்களின் விமர்சனம்.

சென்னை : விஜய் சேதுபதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'.

விஜய் சேதுபதியுடன் கௌதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

நேற்றே துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் படத்தின் பிரிமீயர் ஷோ திரையிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம்...

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் விஜய் சேதுபதி 10-க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படத்தில், 'எமன்' என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

ஆம்லேட் திருடன் கலக்கல்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் முற்றிலும் மாறுபட்ட பிரசென்டேஷன். விஜய் சேதுபதி செமையா கலக்கியிருக்கார். கௌதம் கார்த்திக் உட்பட மற்றவர்கள் நல்லா சப்போர்ட் பண்ணிருக்காங்க. ஆம்லேட் திருடன் கலக்குறார்.

ரவுசு விட்ருக்காங்க

படம் மொத்தமா என்டர்டெயின் பண்ணியிருக்கு.. ஒரு ஜாலியான படத்தைக் கொடுத்திருக்கார் டைரக்டர் ஆறுமுக குமார். விஜய் சேதுபதி - இந்த மனுஷன் செம்ம.. கௌதம் கார்த்திக், டேனி எல்லோரும் சேர்ந்து ரவுசு விட்ருக்காங்க!

இன்னும் சிரிக்கிறேன்

துபாய் பிரிமீயர் ஷோ முடிஞ்சு வெளியில் வர்றேன். செம்ம படம். விசித்திரமான சூழ்நிலைகளில் இருக்கும் தனித்துவமான காமெடி திரைக்கதை ரொம்பவே ஈர்த்தது. விஜய் சேதுபதி ராக்ஸ்டார் - இந்த மாதிரி விசித்திரமான திரைக்கதையை தேர்வு செய்ய தைரியம் வேணும். அற்புதமான அறிமுக இயக்கம் ஆறுமுக குமார். இன்னும் சிரிக்கிறேன்!

விஜய் சேதுபதி வேற லெவல்

வித்தியாசமான திரைக்கதையை நம்பி அதை எக்கச்சக்கமான நகைச்சுவை காட்சிகளையும் சேர்த்து எடுத்திருக்கிற டைரக்டர் பாராட்டுக்குரியவர். விஜய் சேதுபதியும், அவரோட ஒன் லைனர்ஸும் செம்ம.. விஜய் சேதுபதி வேற லெவல்.

டீசன்டான காமெடி படம்

டீசன்டான காமெடி சரவெடி.. மூடர்கூடம், ஜில் ஜங் ஜக் மாதிரி படங்கள் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இந்த படமும் நிச்சயம் பிடிக்கும். பி, சி சென்டர்ல கஷ்டம் தான். ஏ சென்டர் ஆடியன்ஸ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுக்கு உறுதி.

செம ரெஸ்பான்ஸ்

காமெடி ஜானர் படங்களிலேயே ஒரு வித்தியாசமான காமெடி எக்ஸ்பிரிமென்ட் இது. விஜய் சேதுபதி பல்வேறு கெட்டப்களில் கலக்குறார். அவரோட நாலு நிமிஷ டயலாக்குக்கு செம வரவேற்பு. இவை தவிர டேனியலின் காமெடி டைமிங் சூப்பர்!

English summary
Vijay Sethupathi, Gautham Karthik, Niharika, Gayatri and many others have acted in this film 'Oru nalla naal paathu solren'. Yesterday, the film's premiere show has been screened abroad, including Dubai. Many of the fans who have seen the movie have said that they have enjoyed the performance and comedy dialogues of Vijay Sethupathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil