»   »  'நீங்க சாவி.. நாங்க கார்.." - வெளியானது விஜய் சேதுபதி படத்தின் சில நிமிடக் காட்சி!

'நீங்க சாவி.. நாங்க கார்.." - வெளியானது விஜய் சேதுபதி படத்தின் சில நிமிடக் காட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துவரும் விஜய் சேதுபதியுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது.

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்ரி ஆகியோர் நடிக்கும் நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிஹாரிகா கொனிதலா அறிமுகமாகிறார். படத்தில் ரமேஷ் திலக், விஜி சந்திர சேகர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Oru nalla naal paathu solren : sneak peek

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தின் ஆடியோ ஏற்கெனவே வெளியானது. விஜய் சேதுபதி பேசும் சர்ச்சைக்குரிய வசனங்களுடன் வெளியான படத்தின் ட்ரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிலரின் மனம் புண்படும்படி அந்த வசனங்கள் இருப்பதாகவும், படத்திலிருந்து வசனங்கள் தூக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் சில நிமிடக் காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Vijay Sethupathi and Gautham Karthik starring 'Oru nalla naal paathu solren' film will be released on Friday. Sneak peek of this film has been officially released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil