"ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு... ஆண்டவரே நீயும் வந்ததால..."
Recommended Video

சென்னை : மீடியாக்காரர்கள் தன்னிடம் உங்கள் கொள்கை என்ன எனக் கேட்டபோது ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு எனக் கூறினார் சமீபத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் சந்திப்பின்போது சொன்ன இந்த 'ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு' என்கிற வசனம் பயங்கர வைரலானது.
இந்த வாக்கியத்தை வைத்து சாருஹாசன் நடிக்கும் 'தாதா 87' படத்தின் பாடல் வரிகளை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடல் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகியுள்ளது.

சாருஹாசன்
சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் மற்றும் பலர் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'தாதா 87'. கலை சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு
'ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு' என்ற தலைப்பில் 'தாதா 87' படத்தில் ஒரு அசத்தலான புரொமோஷன் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார்.
லிரிக்கல் வீடியோ
வி.எம்.மகாலிங்கம் இப்பாடலை பாடியுள்ளார். லியாண்டா் லீ இசையில் உருவான இப்பாடலை பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அளித்துள்ளது படக்குழு. இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆண்டவரே நீயும் வந்ததால
'ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி... ஆண்டவரே நீயும் வந்ததால..." எனும் வரிகளும் இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கின்றன. ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசிய காட்சியும் இந்தப் பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

பிப்ரவரியில் படம் ரிலீஸ்
'தாதா 87' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி மாதம் 'தாதா 87' படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











