»   »  "ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - பாடல் நாளை ரிலீஸ்!

"ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.." - பாடல் நாளை ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் சந்திப்பின்போது சொன்ன 'ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு' என்கிற வசனம் பயங்கர வைரலானது.

மீடியாக்காரர்கள் ரஜினியிடம், கொள்கை என்ன எனக் கேட்டபோதுதான் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு எனக் கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த வாக்கியத்தை வைத்து சாருஹாசன் நடிக்கும் 'தாதா 87' படத்தின் பாடல் வரிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

சாருஹாசன்

சாருஹாசன்

கலை சினிமாஸ் தயாரிப்பில், சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் மற்றும் பலர் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'தாதா 87'. இப்படத்தின் டீசர் வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு

ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு

ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்தாக, 'ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு' என்ற தலைப்பில் 'தாதா 87' படத்தில் ஒரு அசத்தலான புரொமோஷன் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

நடிகர் ஜனகராஜின் மகன் நவின் ஜனகராஜ் இப்பாடலை பாடியுள்ளார். லியாண்டா் லீ இசையில் உருவான இப்பாடலை பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் பாடல் நாளை வெளியாகிறது.

பிப்ரவரியில் படம் ரிலீஸ்

பிப்ரவரியில் படம் ரிலீஸ்

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி மாதம் 'தாதா 87' படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Rajinikanth's words at a meeting 'Oru nimisham thalai suthiduchu' goes viral on social media. With this sentence, Charuhaasan's 'Dhadha 87' team created a song. This song is being released tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X