»   »  'அந்த' ஒரு வார்த்தையால் விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு வந்த சோதனை

'அந்த' ஒரு வார்த்தையால் விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு வந்த சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடுபக்க கதை படத்திற்கு அந்த ஒரு வார்த்தையால் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்து யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் புகழ் பாலாஜி தரணிதரன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரை வைத்து இயக்கியுள்ள படம் ஒரு பக்க கதை.

படத்தை கே.எஸ். ஸ்ரீனிவாசன் தயாரித்துள்ளார்.

ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை

படத்தில் மூத்த டாக்டர் ஒருவர் ஹீரோயினை பார்த்து அது(intercourse) நடந்ததா என்று கேட்பார். அந்த ஒரு வார்த்தையினால் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டது.

பாலாஜி

பாலாஜி

ஏப்ரல் மாதத்தில் சென்சார் போர்டுக்கு படத்தை போட்டுக் காட்டினோம். யு/ஏ சான்றிதழ் அளித்ததுடன் பல காட்சிகளை கத்தரிக்கச் சொன்னார்கள். இதை எதிர்த்து ஆர்.சி.க்கு விண்ணப்பித்தோம் என்று தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

யு சான்றிதழ்

யு சான்றிதழ்

எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் அடங்கிய ஆர்.சி. குழு பார்த்துவிட்டு யு சான்றிதழ் அளித்தது. மேலும் அந்த வார்த்தையையும் அவர்கள் எதிர்க்கவில்லை என்கிறார் ஸ்ரீனிவாசன்.

ஆபாசம் இல்லை

ஆபாசம் இல்லை

எங்கள் படத்தில் இன்டர்கோர்ஸ் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படவில்லை. பையன், பெண்ணிடமோ, ஒரு பெண் பையனிடமோ கேட்கவில்லை. ஒரு மருத்துவர் பரிசோதனையின்போது தான் கேட்பார் என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

English summary
Balaji Tharaneetharan's Oru Pakka Kathai has finally got U certificate and the word intercourse is allowed to stay.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil