»   »  ஆஸ்கர் போட்டி... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்!

ஆஸ்கர் போட்டி... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏமாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து போகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை காக்கா முட்டைக்குக் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்...

அந்தப் படத்துக்கு பதில் 'கோர்ட்' என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, காக்கா முட்டை, பாகுபலி, பிகே, ஹைதர் உள்பட 30 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.


அவற்றில், புதுமுக இயக்குநர் சைதன்யா தமானே இயக்கியுள்ள கோர்ட் என்ற மராத்தி மொழித் திரைப்படத்தை, பிரபல இயக்குநர் அமோல் பாலேகர் தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது.


இதான் கோர்ட் கதை

இதான் கோர்ட் கதை

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி துப்புரவுத் தொழிலாளி உயிரிழக்கும் அவலத்தை விவரித்தும், இந்திய அரசியல் சட்டத்தை விமர்சித்தும் வயதான நாட்டுப்புற பாடகர் ஒருவர் பாடல் இயற்றுகிறார். இதனால் அவர் வழக்கை சந்திக்க நேரிடுகிறது. வழக்கை அவர் எதிர்கொள்ளும் விதத்தை மையமாக வைத்து கோர்ட் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


17 சர்வதேச விருதுகள்

17 சர்வதேச விருதுகள்

சென்ற ஆண்டின் சிறந்த படம் என்கிற தேசிய விருது கிடைத்த இந்தப் படம் ரூ 3.5 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டது. இதுவரை சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 17 சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது.


ஒருமனதாகத் தேர்வு

ஒருமனதாகத் தேர்வு

விமரிசகர்கள் பலரும் இந்தியாவின் ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட் படமே தேர்வாகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். வெளிநாட்டு இதழ்களிலும் இப்படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தன. பல மட்டத்திலும் இந்தப் படம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


காக்கா முட்டைக்கு இல்லை

காக்கா முட்டைக்கு இல்லை

இத்தனை சாதக பலன்களும் காக்கா முட்டைக்கு இல்லை. தேசிய அளவில் சிறந்த குழந்தைகள் படம் என்கிற விருதைப் பெற்றது. நிறைய பாராட்டுகளை வட இந்தியாவிலும் பெற்றது. சர்வதேசப் படவிழாவிலும் கலந்துகொண்டது. ஆனால் கோர்ட்டுக்குக் கிடைத்த ஏராளமான விருதுகள், சிபாரிசுகள், பாராட்டுகளுடன் ஒப்பிடும்போது காக்கா முட்டை பின்தங்க வேண்டியதாகப் போய்விட்டது.


இயக்குநர் - தயாரிப்பாளர் ஏமாற்றம்

இயக்குநர் - தயாரிப்பாளர் ஏமாற்றம்

காக்கா முட்டை தமிழ் சினிமாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சியைத் தரும் என்றுதான் அதன் இயக்குநர் மணிகண்டன் மற்றும் தயாரிப்பாளர்கள் தனுஷ் - வெற்றிமாறன் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் கோர்ட் நுழைந்தது அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிவிட்டது.


English summary
Why Critically acclaimed Kaakka Muttai hasn't entered in to Oscar Award competition? Here is an analysis.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil