»   »  'தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணன் ஆஸ்கர் டிகாப்ரியோ'... அடங்காத ஆன்லைன் கலாட்டா!!

'தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணன் ஆஸ்கர் டிகாப்ரியோ'... அடங்காத ஆன்லைன் கலாட்டா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

20 ஆண்டுகளுக்கு மேல் ஆஸ்கர் விருதுக்காகக் காத்திருந்த லியானார்டோ டிகாப்ரியோவுக்கு இன்று அந்த விருது கிடைத்தாலும் கிடைத்தது... இங்கே ஆன்லைன் அலப்பறைகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டது.

டைட்டானிக் வெளியான காலத்திலிருந்தே டிகாப்ரியோவுக்கு தமிழகத்திலும் கணிசமான ரசிகர்கள். அவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் கட் அவுட் வைத்து பால் ஊற்றவில்லை என்றாலும், திரளாகச் சென்று படம் பார்த்து தங்கள் ரசிப்புத் தன்மையைக் காட்டி விடுவார்கள்.

Oscar hero Leonardo Dicaprio as Future CM of Tamil Nadu!

கேங்ஸ் ஆப் நியூயார்க், தி ஏவியேட்டர், ப்ளட் டயமண்ட், தி கிரேட் கேட்ஸ்பி, தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் போன்ற படங்களுக்கு இங்கும் நல்ல வரவேற்பு.

ஒவ்வொரு முறையும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு வெறுங்கையோடு டிகாப்ரியோ திரும்புகையில், தமிழ் ரசிகர்கள் தங்கள் ஏமாற்றங்களை வெளிப்படுத்தத் தவறியதில்லை.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார் டிகாப்ரியோ.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். பல திரையுலக, அரசியல் பிரமுகர்கள்கூட டிகாப்ரியோவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதையெல்லாம் பார்த்த சில குறும்புக்கார ரசிகர்கள்தான் 'தமிழ்நாட்டின் அடுத்த சிஎம் ஆஸ்கர் நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ' என்று குறிப்பிட்டு வாழ்த்து போஸ்டர்களை டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.

இன்னொரு ரசிகரோ, 'பலரும் இன்று ஆஸ்கரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கையில், ஆஸ்கர் விருதினை தன்னை நோக்கி வரவைத்த தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணன் டிகாப்ரியோவை வாழ்த்தி வணங்குகிறோம்!' என்று ஒரு போஸ்டர் போட்டுள்ளார்.

English summary
Some of the hard core fans of Oscar winning hero Leonardo Dicaprio hailed him as the future CM of Tamil Nadu!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil