ஆஸ்கர் ரேஸில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்… 6 பிரிவுகளில் வாய்ப்பு? நாளை விருதுகள் அறிவிப்பு

கலிபோர்னியா: 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருதுகளுக்கான பைனல் நாமினேஷன் இந்திய நேரப்படி நாளை மாலை 7 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.

இதில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் மொத்தம் 15 பிரிவுகளில் போட்டியிடுகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியிருந்தது.

இந்நிலையில் ஆஸ்கர் இறுதி நாமினேஷனில் குறைந்தபட்சம் 6 பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் ரேஸில் ஆர்.ஆர்.ஆர்

ஆஸ்கர் ரேஸில் ஆர்.ஆர்.ஆர்

ராஜமெளலி இயக்கிய'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர், பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டியது. ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருதுகளை வெல்லும் என ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆரூடம் கூறியிருந்தனர். இந்தியா சார்பாக குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்யப்பப்பட்டது. இதனையடுத்து. RRR படத்தை ஆஸ்கரில் இடம்பெற வேண்டும் என U.S வினியோகஸ்தர் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆஸ்கர் இறுதி நாமினேஷன்

ஆஸ்கர் இறுதி நாமினேஷன்

சிறந்த படம், சிறந்த இயக்குநர், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த முன்னணி நடிகர், சிறந்த துணை, சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த பாடல் உட்பட மொத்தம் 14 பிரிவுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்நிலையில், நாளை இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு ஆஸ்கர் பைனல் நாமினேஷன் அறிவிக்கப்படவுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் சதுக்கத்தில் இருந்து ஆஸ்கர் இறுதி நாமினேஷன் அறிவிக்கப்படவுள்ளது.

6 பிரிவுகளில் எதிர்பார்ப்பு

6 பிரிவுகளில் எதிர்பார்ப்பு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் தி வே ஆஃப் வாட்டர், டாம் குரூஸ் நடிப்பில் வெளியான டாப் கன் மேவ்ரிக் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் பல பிரிவுகளில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், 15 பிரிவுகளில் போட்டியிடும் ஆர்.ஆர்.ஆர், குறைந்தபட்சம் 6 ஜானரில் இறுதி நாமினேஷனுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பெஸ்ட் சாங் நாட்டு நாட்டு பாடல், சிறந்த நடிகர் ஜூனியர் என்.டிஆர், சிறந்த விஷுவல் எபெக்ட், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த இயக்குநர் ராஜமெளலி, சிறந்த திரைப்படம் என 6 பிரிவுகளில் நாமினேட் ஆக வாய்ப்புள்ளதாம்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்று அசத்தியுள்ளது. இதனால் இந்தப் பாடல் ஆஸ்கர் விருதையும் வாகைசூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏஆர் ரஹ்மான் மட்டுமே சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கீரவாணிக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். மேலும் சிறந்த இயக்குநர் ராஜமெளலி, சிறந்த திரைப்படம் போன்ற பிரிவுகளிலும் ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X