»   »  தெலுங்கில் ரீமேக் ஆகும் ஒஸ்தி: ஏன், ஏன்...?

தெலுங்கில் ரீமேக் ஆகும் ஒஸ்தி: ஏன், ஏன்...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு, ரிச்சா கங்கோபத்யாய நடித்த ஒஸ்தி படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு திம்மிரி என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

அவர் பாட்டுக்கு பிடித்ததை எல்லாம் சாப்பிட்டு புஸு புஸு என்று இருந்த சோனாக்ஷி சின்ஹாவை பார்த்த சல்மான் கான் ஆஹா நீ நடிகையாகலாமே என்று கூறினார். மனிதர் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை சோனாக்ஷியை ஜிம்முக்கு போக வைத்து, உடல் எடையை குறைக்க வைத்து தனது தபாங் படம் மூலம் ஹீரோயினாக்கினார். கடந்த 2010ம் ஆண்டு ரிலீஸான அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது.


இதையடுத்து அந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.


ஒஸ்தி

ஒஸ்தி

சிம்பு, ரிச்சா கங்கோபத்யாய, சந்தானம், சோனு சூத் ஆகியோரை வைத்து தரணி தபாங் படத்தை தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் செய்தார். படத்தில் ஒஸ்தி வேலனாக கெத்தாக வந்திருந்தார் சிம்பு. இருப்பினும் என்ன பயன் ஒஸ்தி மாமுவை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.


கப்பார் சிங்

கப்பார் சிங்

சல்மான் நடித்த அதே தபாங் படத்தை பவன் கல்யாண், ஸ்ருதியை வைத்து தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். தபாங்கை போன்றே கப்பார் சிங்கும் பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக சொல்லி அடித்தது. தற்போது பவன் கல்யாண் கப்பார் சிங் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.


திம்மிரி

திம்மிரி

தமிழிலேயே ஓடாத ஒஸ்தி படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு திம்மிரி என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழக ரசிகர்களை கவராத ஒஸ்தி மாமு தெலுங்கு ரசிகர்களை சுண்டி இழுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


ஏன் இப்படி?

ஏன் இப்படி?

தெலுங்கில் தான் ஏற்கனவே கப்பார் சிங் ரிலீஸானது. இது தவிர கப்பார் சிங் 2 படம் வேறு எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவையில்லாமல் ஒஸ்தியை ஏன் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று டோலிவுட் ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.


கார சாரம்

கார சாரம்

கலர் கலர் உடையில் ஹீரோ, ஹீரோயின் நடனமாடுவது, மசாலா கொஞ்சம் அதிலும் குறிப்பாக காரம் தூக்கலாக இருந்தால் தான் ஒரு படத்தை தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்நிலையில் தான் ஒஸ்தி தெலுங்கில் டப் செய்யப்படுகிறது.


English summary
Simbu starrer Osthe is being remade in Telugu as Timmiri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil