twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போர் அவலம்... ஈழ மக்களின் அவலத்தை சொல்லும் ஒற்றை பனை மரம்

    |

    Recommended Video

    ஈழ மக்களின் அவலத்தை சொல்லும் ஒற்றை பனை மரம்-வீடியோ

    சென்னை: இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஈழ மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் அவர்களின் வாழ்வியலை பேசும் படமே ஒற்றை பனைமரம். ஒற்றை பனைமரம் இயக்கிய பின்பு ரீலிஸ் செய்யாமல் உலகம் முழுவதும் பல படவிழாக்களுக்கு அனுப்பப்பட்டது. அவ்வாறு அனுப்பியதில் இது வரை மொத்தம் 17 விருதுகளை பெற்று அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

    இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் பல்வேறு கொடுமை செய்து மிகக் கொடூரமாக கொத்து கொத்தாக கொல்லப்பட்டடனர்.

    Otrai Panai Maram won 17 International Awards

    அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஈழ மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் அவர்களின் வாழ்வியலை பேசும் படமே ஒற்றை பனைமரம். இப்படம் இயக்குனர் புதியவன் ராசையா எனும் இயக்குனரால் இயக்கப்பட்டிருக்கிறது. இவர் இதற்கு முன்பே மண் என்னும் படத்தை இயக்கியுள்ளார். அதுவும் இலங்கை தமிழர் வாழ்வியலை மய்யமாய் வைத்தே எடுக்கப்பட்ட படமாகும்.

    ஒற்றை பனைமரம் இயக்கிய பின்பு ரீலிஸ் செய்யாமல் உலகம் முழுவதும் பல படவிழாக்களுக்கு அனுப்பப்பட்டது. அவ்வாறு அனுப்பியதில் இது வரை மொத்தம் 17 விருதுகளை தட்டி தூக்கி வந்துள்ளது. இந்த படம் ரீலிஸுக்கு முன்பே 17 விருதுகளை வென்றிருப்பது பலரது புருவங்களை உயர்த்த வைத்து பாராட்டையும் பெற்றுள்ளது.

    இந்த படத்தை ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகவேல் தயாரித்துள்ளார் இவர் இதற்கு முன் பல படங்களை வினியோகித்த முக்கிய வினியோகிஸ்தர் ஆவார் ,இவர் ஒற்றை பனைமரம் படத்தின் மூலம் முதல் முறையாக தயாரிப்பாளர் ஆகிறார்.

    அதுமட்டுமின்றி சினிமாவில் புதுமுகங்களை அறிமுகப்படுத்த தயங்கும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் புதுமுகம் என்ற போதும் கதையையும் இயக்குநரையும் நம்பி இந்த படத்தை தயாரித்துள்ளார் எஸ்.தனிகவேல்.

    இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குநரே நடித்திருக்கிறார். புதியவன் ராசையா உட்பட நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் முன்னோட்டம் யூடியூப்பில் செப்டம்பர் 25ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

    இந்த படத்திற்கு மஹிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைத்திருப்பவர் அஷ்வமித்ரா. ,சி.ஜே.ராஜ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.

      English summary
      In the final battle in Sri Lanka, the Eelam people suffered many hardships. Directed by 'Otrai Panai Maram', it was sent to many festivals around the world without being reissued. In doing so, it has received a total of 17 awards and has looked after them all.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X