Don't Miss!
- News
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! கனிமொழி தந்த ஊக்கம்! நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி மாணவி!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பாபா ரீ-ரிலீஸ் கலெக்ஷன் இவ்வளவு தானா..? ரஜினியின் நம்பிக்கை காலாவதியானது: விளாசிய ப்ளு சட்டை மாறன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது..
2கே கிட்ஸ்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்ற நம்பிக்கையில் ரஜினி பாபா படத்தை ரீ-ரிலீஸ் செய்திருந்தார்.
முதல் நாளில் மட்டும் நல்ல ஓப்பனிங் கிடைத்த பாபா திரைப்படம் குறித்து ப்ளு சட்டை மாறன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது ட்ரெண்டாகி வருகிறது.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் கேரக்டர் இதுதானா...? இன்று மாலை காத்திருக்கும் மாஸ் அப்டேட்!

ரஜினியின் பிறந்தநாளில் பாபா ரீ-ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 2002ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், 20 வருடங்களுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்திற்கும் வழக்கம் போல அதிகாலை 4 மணிக்கு FDFS பார்க்க ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர்.

பாபா பாக்ஸ் ஆபிஸ்
ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்தது பாபா. இந்தப் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கு அப்போது நஷ்ட ஈடு கொடுத்தார் ரஜினி. இந்நிலையில், தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபாவும், பாக்ஸ் ஆபிஸில் தரை தட்டிய கப்பலாக ஏமாற்றம் கொடுத்துள்ளது. முதல் நாளில் 55 லட்சம் ரூபாய் வரை வசூலித்த பாபா, இரண்டாவது நாளில் 45 லட்சமும், மூன்றாவது நாளில் 24 லட்சமும் கலெக்ஷன் செய்துள்ளது. மொத்தமாக 1 கோடியே 25 லட்சம் மட்டும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளாசிய ப்ளு சட்டை மாறன்
பாபா ரீ-ரிலீஸாகும் முன்னர், இதுகுறித்து பேசியிருந்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, "2கே கிட்ஸ்களுக்கு கண்டிப்பாக பாபா திரைப்படம் பிடிக்கும். அவர்கள் இப்படியொரு பேண்டசியான படத்தை மிஸ் பண்ணிடக் கூடாது என்பதற்காகவே ரீ-ரிலீஸ் செய்வதாக ரஜினி கூறினார்" என தெரிவித்திருந்தார். ஆனால், பாபா படம் ரீ-ரிலீஸான பின்னர் நடந்ததோ வேறு. ரஜினி நினைத்த 2கே கிட்ஸ்கள் பாபா படம் ஓடிய தியேட்டர்கள் பக்கம் மழைக்காக கூட ஒதுங்கவில்லை என விமர்சகர்கள் கூறியிருந்தனர். தற்போது ப்ளு சட்டை மாறனும் தனது டிவிட்டரில் பாபா ரீ-ரிலீஸ் குறித்து விமர்சித்துள்ளார்.

ரஜினி காலாவதியாகிட்டார்
இதுகுறித்து ப்ளு சட்டை மாறன் செய்துள்ள டிவிட்டில், "'பாபா' மீண்டும் தோல்வியடைந்துள்ளது. ஒருசில சீனியர் சிட்டிசன்கள் தவிர, இளைஞர்கள் பாபா படத்தை நிராகரித்துவிட்டனர். ரஜினியின் தனிப்பட்ட நம்பிக்கை, அறிவுரைகள், காமெடியான அரசியல் பஞ்ச்கள் ரசிகர்களிடம் செல்லுபடியாகவில்லை. காலாவதியான இந்தப் படம் ரஜினி எதிர்பார்த்ததை விட மோசமான நிலைக்கு சென்றுள்ளது" என பதிவிட்டுள்ளார். ப்ளு சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவு, சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.