»   »  சுந்தர் சி. படத்தில் நடிக்கும் ஓவியா: அந்த படம் இல்லையாம்..

சுந்தர் சி. படத்தில் நடிக்கும் ஓவியா: அந்த படம் இல்லையாம்..

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் சுந்தர் சி. தனது அடுத்த படத்தில் ஓவியாவை ஒப்பந்தம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். ஓவியா ஆர்மியே உருவாகிவிட்டது. இதனால் கோலிவுட்டில் ஓவியாவுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

ஓவியா நடித்துள்ள ஓவியாவ விட்டா யாரு படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.

சுந்தர் சி.

சுந்தர் சி.

சுந்தர் சி. கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறாராம். இந்த படத்தில் நடிக்க ஓவியாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். கலகலப்பு படத்தில் சிவா ஜோடியாக ஓவியா நடித்திருந்தார்.

சங்கமித்ரா

சங்கமித்ரா

சுந்தர் சி தனது மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவுக்கு முன்பு கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ஸ்ருதி

ஸ்ருதி

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாஸன் வெளியேறினார். அதில் இருந்து ஹீரோயின் தேடும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதிபடுத்தப்படவில்லை.

ரவி

ரவி

சங்கமித்ராவில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். ஹீரோயின் கிடைக்கும் வரை சும்மா இருக்காமல் கலகலப்பு 2 பட வேலையில் இறங்கியுள்ளார் சுந்தர் சி.

English summary
Buzz is that Sundar C. is going to direct Kalakalappu part 2 before Sangamitra and he has roped Oviya for the sequel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil