»   »  'பிக்பாஸ்காரன் வீட்டினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே.. அஞ்சாமலிருக்கும் நம்ம ஓவியா!'

'பிக்பாஸ்காரன் வீட்டினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே.. அஞ்சாமலிருக்கும் நம்ம ஓவியா!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலையிலே ஒரு போன், அதில் கேட்டவர் இப்படித்தான் கேட்டார்

"அண்ணே, கலைஞர் பற்றி ஒன்று கேட்கணும்னே"

"என்னய்யா?"

"கலைஞருக்கு ஒரு பாட்டு உண்டே, திமுக மேடைகளில் எல்லாம் போடுவாங்களே என்னண்ணே?"

"நிறைய பாட்டு உண்டு எது?"

"ஏதோ பாம்பு பல்லின்னு வரும்ல அண்ணே?"

ஆமா, "பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே, அஞ்சாமல் இருந்தது யாரு, அந்த கலைஞரின் புகழினை பாடு"

"அதேதாண்ணே அதேதான், தேங்க்ஸ்ணே"

Oviya amidst bigboss's snakes and lizards

"சரி. இப்பொ இந்தபாட்டு எதுக்கு?"

"அண்ணே, அதே பாடலை,
"பிக்பாஸ்காரன் வீட்டினிலே,
பாம்புகள் பல்லிகள் நடுவினிலே,
அஞ்சாமல் இருந்தது யாரு,
அந்த ஓவியா புகழை பாடு.."

இப்படி மாத்தி பாடி ஆல்பம் வெளியிடபோறோம்ணே... இந்த பாட்டை படிச்சது யாருண்ணேண்?"

"நாகூர் ஹனிபா பாடினார், நீங்க இப்படி வருவீங்கண்ணு தெரிஞ்சி செத்துட்டார்"

"அப்படியாண்ணேன்... அப்போ இருக்கிறதுல யாரையாவது வச்சி பாடி ரெக்கார்டு பண்ணிரலாம்ணே"

"ஏண்டா ஏன்?"

"விடக் கூடாதுண்ணே, ஓவியா அழுதிருச்சிண்ணேன், அந்த காயத்திரி, சினேகன், சக்தி எல்லாம் பாம்புண்ணே, அந்த ஜூலி, வையாபுரி எல்லாம் பல்லிண்ணே, இந்த பாட்டை ஆல்பமாக்கி பெரிய ஆதரவ திரட்டபோறோம்ணே, பச்ச மண்ணுண்ணே அவ, காப்பாத்தணும்ணே, நன்றிண்ணே"

எல்லாம் ஓவியா மாயம்!

- ஸ்டான்லி ராஜன்

English summary
Stanley Rajan's Facebook comment on Oviya in big boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil