ஃபர்ஸ்ட் நைட்டை நிறுத்தணும்.. பிக் பாஸ் புகழ் ஓவியா, யோகி பாபுவின் பூமர் அங்கிள் டிரைலர் எப்படி?

சென்னை: ஓவியா, யோகி பாபு நடிப்பில் உருவாகி பூமர் அங்கிள் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

பூமர் அங்கிள் என டைட்டில் வைத்து விட்டு மத்தவங்களை கலாய்ப்பாங்கன்னு பார்த்தா படத்தையே பூமரா இயக்கி இருக்காங்களேன்னு ரசிகர்கள் போதும்மா ஓவியா இதுக்கு நீங்க பிக் பாஸுக்கே வந்திருக்கலாம் என கலாய்த்து வருகின்றனர்.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை எல்லாம் பேயாக மாற்றி பெரிய யூனிவர்ஸையே க்ரியேட் செய்து இயக்குநர் பெரிய சம்பவத்தையே செய்துள்ளார்.

மீண்டும் ஓவியா

மீண்டும் ஓவியா

பிக் பாஸ் முதல் சீசனில் கிடைத்த புகழுக்கு பிறகு ஓவியா சினிமாவில் மீண்டும் பெரிய இடத்தை பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பிக் பாஸ் சீசன் 6-ஏ வந்து விட்டது இன்னமும் நடிகை ஓவியாவுக்கு ஒரு பெரிய ஹிட் கூட அமையவில்லை. சினிமா வாய்ப்புகளும் கிடைக்காமல் இருந்த நிலையில், யோகி பாபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

கான்டிராக்டர் நேசமணி

கான்டிராக்டர் நேசமணி

வடிவேலுவின் கேரக்டர் பெயர்கள் தொடர்ந்து சினிமா பட டைட்டிலாக மாறி வருகின்றன. சதீஷ் நடிப்பில் நாய்சேகர் திரைப்படம் வெளியான நிலையில், வடிவேலு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என தனது படத்தின் தலைப்பையே மாற்றி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியளவில் டிரெண்டான கான்டிராக்டர் நேசமணி டைட்டிலை வடிவேலு தரவில்லையா? என தெரியவில்லை. கடைசி நேரத்தில் பூமர் அங்கிள் என டைட்டில் மாற்றப்பட்டது.

ஹீரோ யோகி பாபு

ஹீரோ யோகி பாபு

ஒரு பக்கம் மண்டேலா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வரும் யோகி பாபு, லவ் டுடே போன்ற படங்களில் காமெடியனாகவும் கலக்கி வருகிறார். இன்னொரு பக்கம் பேய் மாமா, பூமர் அங்கிள் என காமெடி படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். ஓவியாவுடன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

சூப்பர் ஹீரோ பேய்

சூப்பர் ஹீரோ பேய்

இந்த படத்தில் ஹல்காக ரோபோ சங்கர் நடித்துள்ளார். கேஜிஎஃப் பாணியில் ஆரம்பிக்கப்படும் இந்த காமெடி பேய் படம் ரோபோ சங்கரின் எண்ட்ரிக்கு பிறகு ஸ்பைடர்மேன், சூப்பர் மேன், ஜோக்கர், வொண்ட்ர் உமன் என டிசியும் மார்வெல் கதாபாத்திரங்களும் கலந்த யூனிவர்ஸாக செல்கிறது. கடைசியில் அவையெல்லாம் பேய்கள் என சொல்லி மேலும் சோதிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் நைட்டை நிறுத்தணும்

ஃபர்ஸ்ட் நைட்டை நிறுத்தணும்

வொண்டர் உமனான ஓவியா ஹல்க்கை எல்லாம் எட்டி உதைக்கும் காட்சிகளும், கடைசியில் ஓவியாவே ஒரு ஆவி தான் என சொல்லும் காட்சிகளும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. யோகி பாபுவின் ஃபர்ஸ்ட் நைட்டை நிறுத்தணும் என செல்லும் காட்சிகள் தான் அந்த பேய் வீட்டுக்குள்ளேயே ஒரு கும்பலை சிக்க வைக்கிறது என்றும் பிளேடு போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X