»   »  சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா: யாருடன் வருகிறார் தெரியுமா?

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா: யாருடன் வருகிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் ஓவியா ஷாப்பிங் போக ரசிகர்களையும் அழைக்கிறார்-வீடியோ

சென்னை: ஓவியா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்கிறாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகம் கிடைத்துவிட்டனர். அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் ட்விட்டரில் ஓவியா ஆர்மி இன்னும் ஆக்டிவாக உள்ளது.

ஓவியா திரும்பி வர மாட்டாரா என்று ஆர்மிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மார்க்கெட்

மார்க்கெட்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் மார்க்கெட் கண்டமேனிக்கு ஏறிக் கிடக்கிறது. அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் ஆவலாக உள்ளனர்.

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்

தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு அதிகம் ரசிகர்கள் உள்ள ஓவியாவை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிக்க வைக்க உள்ளார்கள். அந்த விளம்பரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் நடிக்கிறார்.

ஹன்சிகா, தமன்னா

ஹன்சிகா, தமன்னா

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடிகைகள் தமன்னா, ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் வந்தார். பின்னர் தனியாக அவரே விளம்பரத்தில் நடித்தார். தற்போது ஓவியாவுடன் நடிக்க உள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஓவியா வந்தால் கடைக்கு நிச்சயம் பெரிய விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளம்பரத்தை காண ஓவியா ஆர்மி ஆவலுடன் உள்ளது.

English summary
Actress Oviya is set to appear in Saravana stores advertisement along with Saravana Arul, the proprietor of the stores.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil