»   »  'ஷட்டப் பண்ணுங்க...' மக்கள் தலைவி ஓவியா பாடல்!

'ஷட்டப் பண்ணுங்க...' மக்கள் தலைவி ஓவியா பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'பலூன்'. யுவன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை 70 எம்.எம் நிறுவனம் தயாரிக்க, ஆரோ சினிமாஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியா பேசிய 'நீங்க ஷட் அப் பண்ணுங்க' என்ற வாக்கியம், சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானது. அந்த வார்த்தையை வரிகளாக்கி பாடல் ஒன்றைத் தயார் செய்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

இந்தப் பாடலை யுவனின் இசையில் அனிருத், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் முழு வெர்சன் நேற்று வெளியிடப்பட்டது.

Oviya army's shutup pannunga song released

இந்தப் பாடலின் மூலம்தான் யுவன் ஷங்கர் ராஜாவும் அனிருத்தும் முதன்முறையாக இணைந்திருக்கிறார்கள். பாடல் வெளியானதும், யுவன், அனிருத் ரசிகர்களும் ஓவியா ரசிகர்களும் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

English summary
'Neenga shutup pannunga' full song released. This song was made for the promo of 'Balloon' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil