»   »  இதே வேலையாப் போச்சு: பிக் பாஸ் மீது கொலவெறியில் ஓவியா ஆர்மி

இதே வேலையாப் போச்சு: பிக் பாஸ் மீது கொலவெறியில் ஓவியா ஆர்மி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா ஆர்மிக்காரர்கள் பிக் பாஸ் மீது கொலவெறியில் உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரவ் வெளியே செல்வது போன்ற ப்ரொமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இதை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் ஆரவ் தான் எலிமினேட் செய்யப்படுகிறார் என்று நினைத்து மகிழ்ந்தனர்.

அப்பாடா தற்போதாவது ஆரவை வெளியே அனுப்பினாரே பிக் பாஸ் என்று நினைத்தனர்.

காஜல்

காஜல்

பிக் பாஸ் வீட்டில் இருந்து சினேகன், காஜல், ஆரவ் ஆகிய மூன்று பேரில் காஜல் தான் எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் ப்ரொமோ வீடியோவை பார்த்து மகிழ்ந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ப்ரொமோ வீடியோவில் ஒன்றை காட்டுவது நிகழ்ச்சியில் வேறுவிதமாக காட்டுவதே இந்த பிக் பாஸுக்கு வேலையாகிவிட்டது. பரபரப்பை ஏற்படுத்த இது எல்லாம் ஒரு பொழப்பா என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் திட்டுகிறார்கள்.

சக்தி

சக்தி

பிக் பாஸ் வீட்டில் ட்ரிக்கர் செய்ய ஆள் இல்லை என்று சக்தியை ஒரு வாரத்திற்கு அழைத்து வந்துள்ளார் பிக் பாஸ். இதுவும் பார்வையாளர்களை கோபம் அடைய வைத்துள்ளது.

காயத்ரி

காயத்ரி

சக்தி வந்தாச்சு அடுத்து வாரம் கால்சியம் காயத்ரியை அழைத்து வருவீர்களா என்று நெட்டிசன்கள் பிக் பாஸை வறுத்தெடுத்து வருகிறார்கள். எல்லோரும் வருகிறார்கள் எங்கள் தலைவி மட்டும் வரவில்லை என்று வருத்தப்படுகிறது ஓவியா ஆர்மி.

English summary
Oviya Army is unhappy with the Big Boss after seeing that it was Kajal and not Aarav who got eliminated on sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil