குஷ்புவை பார்த்து ஒரேயொரு கேள்வியை கேட்கும் ஓவியா ரசிகர்கள்
சென்னை: கலகலப்பு 2 பட அறிவிப்பை வெளியிட்ட குஷ்புவிடம் ஓவியா ஆர்மிக்காரர்கள் ஒரேயொரு கேள்வியை கேட்டு வருகிறார்கள்.
சுந்தர் சி. இயக்கத்தில் விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடித்த படம் கலகலப்பு. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். கலகலப்பு 2 படம் குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கலகலப்பு 2
சுந்தர். சியின் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்கும், அதில் ஜீவா, கேத்ரீன் தெரசா, ஜெய், நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என்று குஷ்பு ட்வீட்டியுள்ளார்.
ஏமாற்றம்
கலகலப்பு 2 படத்தில் ஓவியா இல்லை என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் ஓவியா எங்கேங்க? என்று கேட்டுள்ளார்.
தலைவி
அப்ப எங்க தலைவி ஓவியா எங்க மேடம் #OviyaArmy என்று ஓவியா ஆர்மிக்காரர் குஷ்புவிடம் ட்விட்டர் மூலம் கேட்டுள்ளார்.
ஓவியா
ஓவியா இல்லியா??? எங்களுக்கு ஓவியா நடிக்க வேண்டும் என்று ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











