»   »  செம அடி வாங்கிய பிக் பாஸ்: மீண்டும் வருகிறாரா ஓவியா?

செம அடி வாங்கிய பிக் பாஸ்: மீண்டும் வருகிறாரா ஓவியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வைல்டு கார்டு மூலம் ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பலரும் பார்க்க காரணம் இரண்டு. ஒன்று ஓவியா மற்றொன்று ஜூலி. ஓவியா மீதான பாசம், ஜூலி மீதான வெறுப்பில் நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்தனர்.

ஜூலியை திட்டித் தீர்த்தாலும் அவர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலர் நிகழ்ச்சியை பார்த்தனர். இந்நிலையில் ஓவியா, ஜூலி இருவருமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

ஓவியாவை வெளியேற்றியதால் ஓவியா ஆர்மிக்காரர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளனர். மேலும் யாருக்கும் ஓட்டும் போடுவது இல்லை.

ஓட்டு

ஓட்டு

ஓவியா இருந்தபோது லட்சக் கணக்கில் ஓட்டுகள் விழுந்தது. தற்போது சொற்ப ஓட்டுகளே விழுகிறது. இதை பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆடிப் போயுள்ளார்களாம்.

வைல்டு கார்டு

வைல்டு கார்டு

ஓவியாவை மறுபடியும் அழைத்து வந்தால் தான் நிகழ்ச்சியை ஓட்ட முடியும் என்று நினைக்கிறாராம் பிக் பாஸ். இதனால் வைல்டு கார்டு மூலம் ஓவியாவை அழைத்து வர திட்டமிட்டுள்ளார்களாம்.

பரணி

பரணி

தேவையில்லாமல் பொம்பள பொறுக்கி பட்டம் கொடுத்து விரட்டப்பட்ட பரணியையும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வர திட்டமிடுகிறார்களாம்.

English summary
Buzz is that Big Boss organizers are planning to bring back Oviya as they feel the programme is dull without her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil