»   »  பிக்பாஸ் வீட்டுக்கு ஓவியா ரிட்டர்ன்ஸ்... - எங்க உட்கார்ந்துருகாங்கனு பாருங்க!

பிக்பாஸ் வீட்டுக்கு ஓவியா ரிட்டர்ன்ஸ்... - எங்க உட்கார்ந்துருகாங்கனு பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த மூன்று மாதங்களாக தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு நிறைவடைகிறது.

இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் Grand Finale விழா இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள். ரசிகர்களின் பேராதரவு பெற்ற நடிகை ஓவியாவும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

ஓவியா மக்களே :

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ புகைப்படத்தில் ஓவியா இருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஓவியா ரெஸ்ட் ரூம் அருகில் வெளியே அமர்ந்திருக்கிறார். ஓவியா பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததால் ஆர்மி ரசிகர் படையினர் உற்சாகமாகி வருகிறார்கள்.

ஓவியாடா :

பிக்பாஸ்ல காயத்ரிகிட்ட சண்ட போட்டு ஆரவ்கிட்ட ஏமாந்து நமீதாகிட்ட CURSE வாங்கி BB TASK சொன்ன உடனே வந்து செய்வாளே அந்த மாதிரி ஓவியானு நினைச்சியாடா #OviyaArmy

ஓவியா ஸ்டார் :

ட்விங்கிள் ட்விங்கிள் ஓவியா ஸ்டாராம். பிக்பாஸ் சீசன் 1 சிங்கிள் பிக்சரில் என மக்கள் தலைவி ஓவியாவுக்கு மீம் போட்டிருக்கிறார்கள்.

மிரட்டப் போகுது :

ஓவியாவின் நடவடிக்கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இன்னைக்கு ஷோவில் மிரட்ட போகுது தலைவி #ஓவியா #OviyaArmy #BiggBossTamil.

பாகுபலி - ஓவியா :

ஓவியா பேச ஆரம்பிக்கும்போது பாகுபலி படத்துல மக்கள் ஆரவாரம் பண்ணின மாதிரி இருக்குமாம். அதைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் பொறாமையால் ஓவியாவை வெறுப்பாங்களாம்.

ஆஹான் :

எனக்கே கொடுத்த மாதிரி இருந்துச்சு... இன்னும் எத்தனை பேருக்கு அப்படி இருந்துச்சோ..?

இப்படித்தான் இருப்பாங்க :

ஓவியா ஆர்மி ரசிகர் படையினர் இப்போ இந்த நிலைமையில்தான் இருப்பாங்க. எப்போ மணி 8.30 ஆகும்?

சரியான ஆளுய்யா :

யோவ் சரியான ஆளுய்யா நீ விஜய் டி.வி. ஓவியாவுக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியோட டி.ஆர்.பி எகிறப் போகுது.

ஓவியாதான் வின்னர் :

மக்கள் மனச ஜெயிச்ச ஓவியாதா ஒன் அண்ட் ஒன்லி வின்னர். இன்னிக்கு டி.ஆர்.பி சும்மா அதிரப் போகுது.

English summary
Actor KamalHassan is busy with the Biggboss show that ends today. The grand finale of the event is going to be held today. Fans most wanted contestant Oviya is also attending this event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil