»   »  'சீச்சீ... இதெல்லாம் ஒரு தலைப்பா... ஓவியா இதில் நடிக்கலாமா?'

'சீச்சீ... இதெல்லாம் ஒரு தலைப்பா... ஓவியா இதில் நடிக்கலாமா?'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டின் செல்லப் பெண் ஆகிவிட்ட ஓவியா, இப்போது நடிக்கும் ஒரு படத்தின் தலைப்புக்கு அவரது ரசிகர்கள், குறிப்பாக பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் ஓவியா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்துக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

Oviya fans oppose her new movie title

இந்த படத்தின் தலைப்பு இரட்டை அர்த்தத்தில் இருப்பதால் அது ஓவியாவின் பெண் ரசிகர்கள், குறிப்பாக ஓவியா ஆர்மி மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

'தலைவி ஓவியாவுக்கு நல்ல இமேஜ் உள்ளது. அதை இந்தப் படம் கெடுத்துவிடும் போலிருக்கிறது. இவ்வளவு மோசமாகவா ஒரு தலைப்பு வைப்பார்கள்? ஓவியா இந்தத் தலைப்பின் அர்த்தம் தெரியாமல் ஒப்புக் கொண்டிருப்பார்... அவர் இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது. அல்லது தலைப்பை மாற்ற வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Ovia Army strongly opposing the title of Iruttu Araiyil Murattu Kuththu title in which the actress is going to play lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil