»   »  மகிழ்ச்சி: ரஜினி மாதிரி சிரித்துக் கொண்டே பன்ச் டயலாக் பேசும் ஓவியா

மகிழ்ச்சி: ரஜினி மாதிரி சிரித்துக் கொண்டே பன்ச் டயலாக் பேசும் ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியாவை அழ வைத்து ப்ரொமோ வீடியோ வெளியான வேகத்தில் அவர் சிரித்தபடி இருக்கும் மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் போடுவதில் நெட்டிசன்கள் வேகமாக உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை கவனிப்பதில் பிக் பாஸ் படுவேகமாக உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனித்து வருகிறார் பிக் பாஸ்.

ஓவியா

ஓவியா

இன்று காலை வெளியான ப்ரொமோ வீடியோவில் ஓவியா ஆரவிடம் பேசத் துடிக்க அவர் கண்டுகொள்ளாமல் சென்றார். இதை பார்த்து அழுதார் ஓவியா.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

ஏன்டா பிக் பாஸு, எப்ப பார்த்தாலும் எங்கள் தலைவி ஓவியாவை அழவச்சுக்கிட்டே இருக்க என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து புதிய வீடியோ வெளியானது.

மகிழ்ச்சி

புதிய ப்ரொமோ வீடியோவில் ஆரவ் கண்டுகொள்ளாவிட்டாலும், ஏன் அனைவரும் கண்டுகொள்ளாவிட்டாலும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சி என்கிறார் ஓவியா.

கொலவெறி

கொலவெறி

பிந்து மாதவி வந்ததில் இருந்து ஓவியாவை அசிங்கப்படுத்தும் ஆரவ் மீது ஓவியா ஆர்மிக்காரர்கள் கொலவெறியில் உள்ளனர். அந்த ஆம்பள ஜூலி ஒரு துரோகி என்று திட்டுகிறார்கள்.

English summary
Big Boss has released a new promo video in which Oviya is seen smiling and saying Magizhchi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil