»   »  'ஓவியா.. சீக்கிரம் வெளிய வந்துடும்மா... இல்லன்னா நிஜமா பைத்தியமாகிடுவ!'

'ஓவியா.. சீக்கிரம் வெளிய வந்துடும்மா... இல்லன்னா நிஜமா பைத்தியமாகிடுவ!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் வீட்டில் யார் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவால்ல... ஓவியா சேஃபா இருந்தா போதும் என்பதுதான், நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் 90 சதவீதம் பேரின் மனநிலை. காரணம் பிக் பாஸ் விதிகளையே அசால்டாக மீறி, தன் போக்கில் வாழும் ஓவியாவின் குணம்.

கடந்த 35 நாட்களாக ஓவியா ஓவியாவாகவே இருந்ததைப் பார்த்து கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள், இப்போது அவரை பிக்பாஸ் வேறு மாதிரி பெண்ணாகக் காட்ட முயற்சிப்பதை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஓவியாவை அசிங்கப்படுத்தும் பிக் பாஸ்

ஓவியாவை அசிங்கப்படுத்தும் பிக் பாஸ்

சினிமாவிலும் சரி, மாடல் உலகிலும் சரி.. ஆரவ் ஒரு பூஜ்யம்தான். ஆனால் ஓவியா பெரிய நடிகை. இந்த இருவரையும் கோர்த்துவிட முயற்சித்தார் பிக் பாஸ். அதில் ஓவியா பலவீனமாக ஆரவிடம் விழுந்துவிட்டது போலவும், ஆரவ் என்னமோ பெரிய ஆணழகன் மாதிரியும் காட்டி வருகின்றனர். ஆரவ் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று புரண்டு அழுது ஓவியா கதறுவது போல காட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லூசு மாதிரி ஓவியாவைச் சித்தரிக்கின்றனர்.

காயத்ரியின் பேயாட்டம்

காயத்ரியின் பேயாட்டம்

'இன்னொரு பக்கம் காயத்ரியின் பேயாட்டம் தொடர்கிறது. ஓவியாவை மீண்டும் 'பெரிய ஹேரா இவ' என்று கேவலமாகப் பேசுகிறார். ஓவியா தட்டைக் கழுவவில்லை என்று பாத்திரங்களை உருட்டுகிறார் காயத்ரி... ஒரு திமிர்ப்பிடித்த ரவுடி மாதிரி. அவருக்கு ஜோடியாக இன்னொரு ரவுடியாக சக்தி. இதில் தேடித் தேடிப் போய் கட்டிப்பிடித்துத் தடவும் சினேகன்... உச்சகட்ட எரிச்சலூட்டும் காமெடி பீஸ் ஜூலி, இவர்களை சுத்தமாகவே கண்டு கொள்ளாமல் ஓவியாவையே குறை கூறும் கமல் ஹாஸன்... இவர்களுக்கு மத்தியில் இன்னும் கொஞ்ச நாள் இருந்தால் நிஜமாகவே பைத்தியமாகிவிடுவாய் ஓவியா... அதற்கு முன் வெளியில் வந்துவிடு' என்று வலைத் தளங்களில் கருத்துப் பதிந்து வருகிறார்கள்.

பார்க்க நேர்ந்தால்

பார்க்க நேர்ந்தால்

இந்த பிக்பாஸ் முடிந்து வெளியில் வந்த பிறகு, அங்கு அரங்கேறிய காட்சிகளைப் பார்க்க நேர்ந்தால் ஓவியா ஏதாவது செய்து கொள்வார் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிக் மாமா

பிக் மாமா

பிக் பாஸ் வீட்டில் கலகலப்பு, வாய்ச் சண்டை இருக்கும் என்று எதிர்ப்பார்த்தால், ஆணையும் பெண்ணையும் கோர்த்துவிட்டு அவர்கள் வலிகளை வேடிக்கைப் பார்க்கும் பிக் மாமாவாகிட்டாரே இந்த பிக் பாஸ் என கேவலமாகப் பேசும் நிலைக்குப் போய்விட்டது நிகழ்ச்சி. நூறு நாட்களுக்குள் இன்னும் என்னென்ன அசிங்கங்களை அரங்கேற்றப் போகிறார்களோ!

English summary
The viewers of Big Boss have urged Oviya to come out from the house because of ugly scenes staged around the actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil