»   »  கவுதம் கார்த்திக்குடன் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தில் நடிக்கும் ஓவியா

கவுதம் கார்த்திக்குடன் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தில் நடிக்கும் ஓவியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் புகழ் ஓவியா கவுதம் கார்த்திக் ஜோடியாக இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் கொண்டார் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். அவரது ரசிகர் பட்டாளத்தை பார்த்து கோலிவுட்டே வியக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்லப் போவது இல்லை என்பதில் ஓவியா திட்டவட்டமாக உள்ளார்.

ஓவியாவ விட்டா யாரு

ஓவியாவ விட்டா யாரு

ஓவியா நடித்துள்ள ஓவியாவ விட்டா யாரு படம் ரிலீஸாக தயாராக உள்ளது. ஓவியா ஆர்மியை மனதில் வைத்தே படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் ஓவியா- கவுதம் கார்த்திக் ஜோடியாகிறார்-வீடியோ
கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்துள்ள அடல்ட் காமெடி படம் ஹரஹர மகாதேவகி. இந்த படத்தை தயாரித்துள்ள தங்கம் சினிமாஸ் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து

இருட்டு அறையில் முரட்டுக் குத்து

ஹரஹர மகாதேவகி படத்தை அடுத்து கவுதம் கார்த்திக்கை வைத்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தை எடுப்பதாக தங்கம் சினிமாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவியா

ஓவியா

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் கவுதம் கார்த்திக் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். படத்தில் நடிக்க அவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மெர்சல்

மெர்சல்

ஹரஹர மகாதேவகி படம் விஜய்யின் மெர்சல் படத்துடன் சேர்ந்து ரிலீஸாக உள்ளது. ட்ரெய்லரை பார்த்துவிட்டு பலரும் படத்தை பார்க்க மிக ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Oviya is set to act with Gautham Karthik in a movie titled ' Iruttu Araiyil Murattu Kuthu'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil