TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
“பிரண்டிடா.. நாங்க பிரண்டிடா..” ஓவியா ஆர்மிக்கு புது ‘ரிங்டோன்’ தந்த சிம்பு!
சென்னை: ஓவியா நடிக்கும் 90 எம் எல் படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, பிக் பாஸ் முதல் சீசன் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், இன்றளவும் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பல படங்களில் ஒப்பந்தமானார் ஓவியா. அவற்றில் ஒன்று தான் 90 எம் எல்.
அனித் உதீப் இயக்கும் இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். நடிப்பிற்கு இடையேயும் இப்படத்திற்கு இசையமைக்கும் வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறும் 'பிரண்டிடா' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. லிரிக் வீடியோவாக இந்தப் பாடல் காட்சிகள் உள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த வீடியோ பாடலை வெளியிட்டார்.
பெண்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு பிடித்த பாடலாக இப்பாடல் மாறியுள்ளது. இந்தப் பாடலை ஓவியா ரசிகர்கள் மட்டுமின்றி, சிம்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே புத்தாண்டையொட்டி இப்படத்தில் இடம் பெற்றிருந்த பீர் பிரியாணி பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Here is the #FRIENDyDa Lyrical Video from #90mlFilmhttps://t.co/6Fl4mNdJ5P
— aishwarya rajessh (@aishu_dil) January 17, 2019
A #STRMusical @OviyaaSweetz @AnitaUdeep @90ml_film @NvizFilms @MirchiRJVJ @proyuvraaj pic.twitter.com/z8nHdDZAhQ
இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.