»   »  விஜய் டிவியில் இன்று 'ஓவியா க்ளாஸிக்'... ஆர்மிக்காரர்களுக்கு ஒரே குஷி!

விஜய் டிவியில் இன்று 'ஓவியா க்ளாஸிக்'... ஆர்மிக்காரர்களுக்கு ஒரே குஷி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகமே ஓவியா மயமாகிவிட்டது மாதிரி இருக்கிறது. சமூகவலைத் தளங்களில் ஓவியா பதிவுகள். செய்தித் தளங்களில் ஓவியா செய்திகள்.. வம்பர்கள் வாயெல்லாம் ஓவியா புராணம்.

'இந்தப் பொண்ணு எப்ப வெளியில வரும்... உடனே புக் பண்ணலாம்' என்று பணப்பையோடு தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னணி நடிகர்களும்கூட அவருடன் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.


Oviya's Kalavani gets new attention in Vijay TV

ஒரு பக்கம், ஓவியா தற்கொலை முயற்சி, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வருகிறார், இல்லையில்லை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள் என்றெல்லாம் பரபரத்துக் கொண்டிருக்க, பிக்பாஸை ஒளிபரப்பும் அதே விஜய் டிவியில் இன்று களவாணி படம் போட்டுள்ளனர். இந்தப் படம் வெளியானதிலிருந்து பலமுறை போட்ட படம் இது. விஜய் டிவியில் களவாணி என்றாலே காத தூரம் ஓடும் அளவுக்கு போட்டுத் தேய்ந்த படம் அது.


ஆனால் இன்று அத்தனைப் பேர் வீடுகளிலும் களவாணி படம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. 'யாருக்காக... எல்லாம் தலைவி ஓவியாவுக்காக' என்று ஒரே கோரசாக முழங்குகிறார்கள் வலைவாசிகள்.


களவாணி படத்தில்தான் ஓவியா முதல் முதலாக அறிமுகமானார். முதல் படமே ப்ளாக்பஸ்டர் ஹிட். அதன் பிறகு ஓவியாவுக்கும் நல்ல வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் ஏனோ எதுவும் களவாணி அளவுக்கு ஓடவில்லை.


இப்போது பிக் பாஸ் மூலம் புயலாக அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கிறார்.

English summary
Today Vijay TV is telecasting Oviya's superhit movie Kalavani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil