»   »  யானையுடன் ஓவியா நடித்த 'சீனி'... சென்சாரில் 'யு' சான்றிதழ்!

யானையுடன் ஓவியா நடித்த 'சீனி'... சென்சாரில் 'யு' சான்றிதழ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் - சிம்ரன் ஜோடி நடித்த 'ஐ லவ் யூ டா ' படத்தை இயக்கியவர் ராஜதுரை.

பிரபல இயக்குநர் சுராஜிடம் கொஞ்ச காலம் அசோஸியேட்டாக இருந்த ராஜதுரையின் இயக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள திரைப்படம் 'சீனி.'

Oviya starring Seeni gets U

'வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்' எனும் பேனரில் மதுரை.ஆர்.செல்வம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள ' சீனி' திரைப்படத்தில் அறிமுக நாயகர்கள் சஞ்சய் , பரத்ரவி இருவருடன், முன்னணி இளம் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 2015ம் ஆண்டின் இறுதியில் சென்சார் ஒரு கட் கூட கொடுக்காமல் 'யு' சான்று வழங்கியுள்ளது.

'சீனி' படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிபெண் நிருபராக வரும் ஓவியாவுடன், சஞ்சய், பரத்ரவி , ராதாரவி, செந்தில், 'பருத்திவீரன்' சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், கஞ்சாகருப்பு , சின்னிஜெயந்த், வையாபுரி, ரவிமரியா, தாஸ், டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார், பாவா லட்சுமணன், 'லொள்ளு சபா' சுவாமிநாதன் , மீரா கிருஷ்ணன், புவனா உள்ளிட்ட ஒரு பெரும் காமெடி பட்டாளமும் , நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Oviya starring Seeni gets U

சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் 'சீனி' படத்தில் நடித்துள்ளதும், அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் உருக்கமான பாத்திரம் ஏற்றுள்ளதும், பவர் ஸ்டாருக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்பதும் குறிப்பிடத்தக்கது!

Oviya starring Seeni gets U

'சீனி' திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சினேகன், விவேகா இருவரும் பாடல்கள் எழுத, ராதிகா, பாரதி இருவரும் நடனம் அமைத்திருக்கின்றனர். , சண்டை பயிற்சி - பவர் பாஸ்ட் பாபு, படத்தொகுப்பு - சாய் சுரேஷ், ஒளிப்பதிவு - நாகராஜன், தயாரிப்பு மேற்பார்வை - ராஜா, தயாரிப்பு - மதுரை ஆர்.செல்வம், எழுத்து, இயக்கம் - ராஜதுரை.

2016 - புத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் திரைக்குவருகிறது 'சீனி'.

English summary
Seeni is the new movie starring Oviya with an Elephant and the movie has got clean U certificate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil