ரசிகர்களை மிரட்டும் ஓவியா... அழகிய பேய்களாக பயமுறுத்தும் ஓவியா, வேதிகா!
Recommended Video

சென்னை : ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் படம் 'காஞ்சனா 3'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா, நிகிதா ஆகியோர் நடித்து வருகின்றனர். வேதிகா மற்றும் ஓவியா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செட்டில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா மற்றும் வேதிகா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ராகவலா லாரன்ஸின் காஞ்சனா 3
பேய் படங்களான 'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2' வரிசையில் தற்போது 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினார் ராகவா லாரன்ஸ். இந்தப்படத்தில் நடித்து இயக்கியும் வருகிறார் ராகவா லாரன்ஸ்.

மூன்று நாயகிகள்
இப்படத்தில் ஓவியா, வேதிகா மற்றும் நிகிதா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் 'காஞ்சனா 3' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பயமுறுத்தும் வேதிகா
இந்நிலையில் நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் 'காஞ்சனா 3' ஷூட்டிங்கின்போது ராகவா லாரன்ஸுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அழகான பேய் ஓவியா
வேதிகாவைப் போல, ஓவியாவின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் வைரலாகி வருகிறது. படத்தை விரைவில் முடித்து கோடை விடுமுறையில் குழந்தைகளைக் குறிவைத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











